அபாரமாக ஆடி இத்தாலியுடன் டிரா செய்த நியூசிலாந்து

ஷான் ஸ்மெல்ட்ஸ் போட்ட அந்த கோலை நியூசிலாந்து வீரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் படு எளிதான கோலாக அது அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்மெல்ட்ஸே கூட அந்த பந்தையும், அது கோலாக மாறியதையும் எதிர்பார்க்கவில்லை. அது நிச்சயம் அவர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக அமைந்தது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்தே நியூசிலாந்து வீரர்கள் இத்தாலிக்கு சரியான நெருக்கடியைக் கொடுத்து ஆட ஆரம்பித்தனர். பந்துகளைப் பறிப்பதிலும், அதை கோலுக்கு விரட்டுவதிலும் படு வேகமாக செயல்பட்டனர். ஐரோப்பிய அணியான இத்தாலிக்கு, நியூசிலாந்து நேற்று பெரும் சவாலாக மாறியது.
இந்த நெருக்கடி காரணமாக லிப்பி தலைமையிலான இத்தாலி அணியால், கோல் போஸ்ட்டுக்கு போவதே பெரும் சிரமமாகி விட்டது.
அதேசமயம், அவ்வாறு கடுமையான நெருக்கடியைக் கொடுத்ததால்தான் நியூசிலாந்துக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்து முதல் ஆளாக கோலைப் போட்டு இத்தாலியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இருப்பினும் அதன் பின்னர் சுதாரித்து ஆடிய இத்தாலி வீரர்கள், நியூசிலாந்து மீண்டும் கோல் போட்டு விடாமல் படு தெளிவாக இருந்து தடுத்தனர். முதல் பாதி ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி வின்சென்ட்ஸோ இயாகுயின்டோ ஒரு கோலடித்து சம நிலையை ஏற்படுத்தி இத்தாலிக்கு நிம்மதிப் பெருமூச்சு அளித்தார்.
இந்தப் போட்டியின் மூலம் நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறும் வாய்ப்பை நியூசிலாந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications