ஸ்லோவேகியாவை 'சுளுக்'கெடுத்த பராகுவே-ரிவெரோஸ் கோலால் பலே வெற்றி

இந்த வெற்றி, பராகுவே அணிக்கு நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த முதல் வெற்றியாகும். முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோலும், 2வது பாதி ஆட்டத்தில் இன்னொரு கோலும் போட்டது பராகுவே. முதலில் என்ரிக் வெராவும், 2வது பாதியில் கிறிஸ்டியன் ரிவரோஸும் அபாரமான கோலடித்தனர்.
முதல் நிமிடத்திலிருந்து கடைசி நிமிடம் வரை ஆட்டம் முழுமையாக பராகுவே வசம் இருந்தது. இப்போட்டியில் பராகுவே மேலும் சில கோல்களை அடித்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை தோல்வியில் முடிந்து விட்டன.
ஆட்டத்தின் 27வது நிமிடத்தில், தன்னிடம் வந்த பந்தை அபாரமாக கோல் கம்பத்திற்குள் தள்ளி கோலாக்கினார் வெரா.
மறுமுனையில் பதிலுக்கு கோலடிக்க முடியாமல் திணறியது ஸ்லோவேகியா. இந்த நிலையில், 86வது நிமிடத்தில், ரிவரோஸ் தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்து பராகுவேக்கு வெற்றி தேடித் தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் நாக் அவுட் ரவுண்டுக்கு போகும் வாய்ப்பை சற்று பிரகாசப்படுத்தியுள்ளது பராகுவே. அதேசமயம், இத்தாலியுடன் அடுத்து மோதவுள்ள ஸ்லோவேகியா அதில் வென்றால் முன்னேற்றம் குறித்து யோசித்துப் பார்க்க முடியும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications