முதல் போட்டிகளில் தோல்வியுற்ற ஸ்பெயினும், ஹோண்டுராஸும் தங்களது அடுத்த வெல்லும் நோக்கில் இன்றைய போட்டியில் சந்திக்கின்றன.
தனது முதல் போட்டியில் சுவிட்சர்லாந்திடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின். கடந்த 49 போட்டிகளில் ஸ்பெயின் சந்தித்த முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சிலியிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது ஹோண்டுராஸ்.
எனவே நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற இன்றைய போட்டியில் இரு அணிகளும் வென்றாக வேண்டிய கட்டாய நிலை.
முதல் போட்டியில் பலம் வாய்ந்த அணியிடம்தான் (சிலி) தோற்றுள்ளோம். எனவே இதற்காக வருந்தவில்லை. மாறாக இன்றைய போட்டியில் ஸ்பெயினை வென்று சரித்திரம் படைப்போம் என ஹோண்டுராஸ் நம்பிக்கையுடன் கூறுகிறது.
சிலியுடன் மோதியதை விட இன்று சிறப்பாக ஆடி ஸ்பெயினை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஹோண்டுராஸ் வீரர் ஹூடா கூறுகிறார்.
இன்றைய போட்டியில் டேவிட் வில்லா, பெர்னாண்டோ டாரஸ் ஆகிய ஸ்பெயின் வீரர்களும், ஹோண்டுராஸின் வில்சன் பலசியோஸின் ஆட்டமும் விருந்தளிக்கும் என நம்பலாம்.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]