சிலியை வீழ்த்த சுவிஸ் தயார்!

இன்று நடைபெறும் 2வது உலகக் கோப்பைப் போட்டியில், 24வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தும், 18வது இடத்தில் உள்ள சிலியும் மோதுகின்றன.
இரு அணிகளும் இதற்கு முன்பு 3 முறை மோதியுள்ளன. அதில் 2 முறை சுவிஸ் வென்றுள்ளது. ஒரு முறை சிலிக்கு வெற்றி கிடைத்தது.
தனது முதல் போட்டியில் ஹோண்டுராஸை 1-0 என்ற கோல் கணக்கில் சிலி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. இதன் மூலம் தொடர்ந்து உலகக் கோப்பைத் தொடரில் 13 போட்டிகளில் தோற்று வந்த அவமானத்தைத் துடைத்துக் கொண்டது சிலி.
இன்றைய போட்டியில் சுவிட்சர்லாந்து தனது ஸ்டார் வீரர்களான பிரெய் மற்றும் பஹ்ராமி ஆகியோரின் வருகையில் பலம் அடைந்துள்ளது. சிலியை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள இது உதவும் என்கிறார் ஸ்விஸ் பயிற்சியாளர் ஹிட்சரால்ட்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications