மார்க் போட்ட கோல்-சிலிக்கு வெற்றி

நேற்றைய ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் அட்டாக்கை விட தடுப்பாட்டம் பிரமாதமாக இருந்தது. ஆட்டத்தின் 75 நிமிடம் வரை ஒருகோலும் விழாமல் இரு அணியினரும் விரக்தியில் இருந்தனர். இந்த நிலையில் 75வது நிமிடத்தில் எஸ்டீபன் பரேதஸ் எடுத்துக் கொடுத்த பந்தை தலையால் முட்டி கோலுக்குள் தள்ளி அணியை தூக்கி நிறுத்தினார் கோன்சாலஸ்.
இந்த வெற்றி சிலிக்குக் கிடைத்த 2வது வெற்றியாகும். இதன் மூலம் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததோடு, நாக் அவுட் ரவுண்டுக்கும் அது முன்னேறியது.
அதேசமயம், தனது முதல் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி சாதனை படைத்திருந்த சுவிட்சர்லாந்து தற்போது வெறும் 3 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளது.
தனது அடுத்த போட்டியில் ஸ்பெயினை சந்திக்கிறது
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications