Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாஜிக் நிகழுமா?-எதிர்பார்ப்பில் நைஜீரியா!

Nigerian
இன்று நடைபெறும் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் தென் கொரியாவும், மாஜிக் ஏதாவது நடக்காதா என்ற எதிர்பார்ப்பில் நைஜீரியாவும் களம் காண்கின்றன. உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

தங்களு முதல் போட்டியில் கிரீஸை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற தென் கொரியா, 2வது போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வியுற்றது.

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நைஜீரியா, தனது முதல் போட்டியில், அர்ஜென்டினாவிடம் 0-1 என்ற கணக்கிலும், கிரீஸிடம் 1-2 என்ற கோல் கணக்கிலும் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. எனவே இன்று வெற்றி பெற்று ஏதாவது மாஜிக் நடந்தால்தான் அடுத்த நாக் அவுட் ரவுண்டுக்கு அது முன்னேற முடியும்.

தென் கொரியா மீது நெருக்கடி குறைவாக இருந்தாலும் கூட இந்தப் போட்டியில் அது வென்றாக வேண்டியது அவசியமாகும். இன்று நடைபெறும் போட்டியில் அது வென்று, அர்ஜென்டினாவிடம் கிரீஸ் தோற்றால், நாக் அவுட் ரவுண்டுக்கு தென் கொரியா முன்னேற முடியும்.

நைஜீரியாவுக்கு இந்த சிக்கலெல்லாம் இல்லை. இன்றைய போட்டியில் வென்றால் உண்டு, இல்லாவிட்டால் விடு ஜூட் வீட்டுக்கு என்ற நிலையில் அது உள்ளது.

இரு அணிகளிடமும் சில பொதுவான பலவீனங்கள் உள்ளன. இருவருமே தடுப்பாட்டத்தில் மகா பலவீனமாக உள்ளனர். இருப்பினும் இரு அணிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் வீரர்கள் தங்களை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அணி உள்ளது.

இன்றைய போட்டியில் நைஜீரியாவின் நம்பிக்கையாக உசே உள்ளார். கூடவே கோல் கீப்பர் வின்சென்ட் எனிமாவும் கவனிக்கப்பட வேண்டியவர்தான். தென் கொரியாவின் பார்க் ஜி சுங் மிரட்டலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+