ஸ்பெயினை தூக்கி நிறுத்திய வில்லா

கோப்பையை வெல்லும் என கருதப்படும் சில அணிகளில் ஸ்பெயினும் ஒன்று. ஆனால் தனது முதல் போட்டியில் அது தோற்றுப் போய் அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் நேற்று தனது முழு பலத்தையும் காட்டி விளையாடியது ஸ்பெயின். இதனால் ஹோண்டுராஸ் தோல்வியில் வீழ்ந்தது.
நேற்றைய வெற்றியின் மூலம் ஸ்பெயின் தற்போது எச் பிரிவில் சுவிட்சர்லாந்துடன் இணைந்து சம நிலையை எட்டியுள்ளது. சிலி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. சிலியுடன் வருகிற வெள்ளிக்கிழமை ஸ்பெயின் மோதவுள்ளது. அதேசமயம், ஹோண்டுராஸ் தனது கடைசி லீக் போட்டியில், சுவிட்சர்லாந்தை வென்றாக வேண்டும். அதேபோல சிலி ஸ்பெயினை வீழ்த்தியாக வேண்டும். அப்போதுதான் ஹோண்டுரோஸுக்கு அடுத்த சுற்றுக்குப் போகும் வாய்ப்புகிடைக்கும்.
நேற்றைய ஆட்டத்தில் வில்லாவின் சிறப்பான பார்ம் ஸ்பெயினுக்கு வெற்றி தேடித் தந்தது. அவரும் டோரஸும் இணைந்து ஆட்டத்தை நேர்த்தியாக கொண்டு சென்றனர்.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் தனது முதல் கோலைப் போட்டார் வில்லா. அதன் பின்னர் 2வது பாதி ஆட்டத்தின்போது, 51வது நிமிடத்தில் 2வது கோலடித்தார்.
நேற்றைய ஆட்டத்தின் மூலம் தனது பலம் நீர்த்துப் போய்விடவில்லை என்பதை ஸ்பெயின் நிரூபித்து விட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications