நேற்று நடந்த கிரீஸுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது அர்ஜென்டினா. இதன் மூலம் கிரீஸ் போட்டித் தொடரை வெளியேற்றப்பட்டு விட்டது. தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (ரவுண்ட் 16) அர்ஜென்டினா, மெக்சிகோவை சந்திக்கிறது.
நேற்றைய போட்டியில் அர்ஜென்டினா இரண்டு கோல்களை அடித்தாலும் கூட முதல் பாதியில் அதனால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. கொஞ்சம் திணறத்தான் செய்தது. 2வது பாதியின் இறுதியில்தான் அது அடுத்தடுத்து 2 கோல்களை அடித்தது.
77வது நிமிடத்தில் மார்ட்டின் டெமிசெலிஸ் முதல் கோலை அடித்தார். அடுத்து, 89வது நிமிடத்தில் மார்ட்டின் பாலர்மோ அடுத்த கோலை அடித்து அணியின் வெற்றியை வலுவாக்கினார்.
நேற்றைய போட்டியில் அர்ஜென்டினா வலுவான வெற்றியைப் பெற்ற போதிலும், அந்த அணியை சற்று பதட்டப்பட வைத்துவிட்டது கிரீஸ் என்பது உண்மையே.
நேற்றைய போட்டியில் கேப்டனாக செயல்பட்டார் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]