இங்கிலாந்துக்கு வாழ்வா, சாவா?

முதல் இரு போட்டிகளும் இங்கிலாந்துக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டது. இரண்டிலுமே டிரா செய்ததால் வெறும் 2 புள்ளிகளுடன் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் அது வென்று 3 புள்ளிகளைப் பெற்றால்தான் நாக் அவுட் ரவுண்டுக்குப் போக முடியும். மாறாக டிரா செய்தாலோ அல்லது தோற்றாலோ சிக்கலாகி விடும்.
மறுபக்கம் 4 புள்ளிகளுடன் ஸ்லோவேனியா சற்று தெம்பாகவே உள்ளது. இருப்பினும் இன்றைய போட்டியில் இதுவும் வென்றாக வேண்டும். இல்லாவிட்டால் அல்ஜீரியாவுடனான போட்டியில் அமெரிக்கா வென்று விட்டால் ஸ்லோவேனியாவுக்கு சிக்கலாகி விடும். அதேசமயம், தோற்காமல் டிரா செய்து விட்டால் கூட போதும், அது நாக் அவுட் ரவுண்டுக்குப் போய் விடும்.
இன்றைய போட்டியை வெல்ல இங்கிலாந்து தீவிரமாக உள்ளது. அமெரிக்காவுடனான போட்டியில் அது நல்ல நிலையில்தான் இருந்தது. ஆனால் தடாலடியாக டெம்ப்சி போட்ட கோலும், தனது கோல்கீப்பர் க்ரீன் செய்த தவறும் இங்கிலாந்தின் தலையில் இடியை இறக்கி விட்டு விட்டது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தால் இப்போது நிம்மதியாக இருந்திருக்கும்.
இன்றைய போட்டியில் இங்கிலாந்தின் ஜான் டெர்ரி கடுமையாகப் போராடுவார் என நம்பலாம். அதேபோல ஸ்லோவேனியா தரப்பில் மிலிவோஜே நோவோகிக் கலக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications