தப்பியது தென் கொரியா

தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி தென் கொரியாதான்.
டர்பனில் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கடுமையாக ஆடின. இதன் விளைவு இரு அணிகளும் தலா 2 கோல்களைப் போட்டன. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஆட்டம் தொடங்கிய 12 நிமிடத்திலேயே நைஜீரியாவின் கலு உசே கோலடித்து அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார்.
இதையடுத்து 38வது நிமிடத்தில், லீ ஜங் சு கோலடித்து சம நிலையை ஏற்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து 49வது நிமிடத்தில், பார்க் சு யங் ஒரு கோலடித்து தென் கொரியாவுக்கு முன்னிலை தேடித் தந்தார்.
இதனால் ஆவேசமடைந்த நைஜீரிய வீரர்கள் படு தீவிரமாக இறங்கி ஆடியனர். இந்த நிலையில் 69வது நிமிடத்தில் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு யாக்கூபு அபாரமான கோலாக்கி டிரா ஆக்கி விட்டார்.
பி பிரிவில் இந்தப் போட்டியிடுன் சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வந்தன. இறுதிப் புள்ளிகள் பட்டியலின்படி முதலிடத்தை அர்ஜென்டினாவும் (9 புள்ளிகள்), தென் கொரியாவும் (6 புள்ளிகள்) நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறின. நைஜீரியாவும், கிரீஸும் வெளியேற்றப்பட்டன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications