Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செர்பியாவை வீழ்த்தியும் புண்ணியமில்லை-வெளியேறியது ஆஸி.

Brett Holman of Australia With Team Mates
செர்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றும் கூட கோல்கள் அடிப்படையில் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டதால் உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலிருந்து ஆஸ்திரேலியா வெளியேற்றப்பட்டு விட்டது.

நெல்ஸ்ப்ரூட்டில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும், செர்பியாவும் விறுவிறுப்பாக மோதின. இந்தப் போட்டிக்கு முன்பு செர்பியா 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா நான்காவது இடத்திலும் இருந்தன. ஆனால் போட்டியின் முடிவில் 3வது இடத்திற்கு ஆஸ்திரேலியாவும், நான்காவது இடத்திற்கு செர்பியாவும் போய் விட்டன.

வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மோதியதால் இரு அணிகளாலும் முதல் பாதியில் கோலடிக்க முடியவில்லை. தடுப்பாட்டத்தை இரு அணிகளும் தீவிரமாக பின்பற்றியதே இதற்குக் காரணம்.

2வது பாதி ஆட்டத்திலும் போட்டி கடுமையாக இருந்தது. இந்த நிலையில், 69வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிம் கஹில் ஒரு கோலடித்து ஆஸ்திரேலியாவுக்கு முன்னிலை கொடுத்தார்.

அடுத்த நான்கு நிமிடங்களில் அதாவது 73வது நிமிடத்தில் சப்ஸ்டிடியூட் வீரர் பிரெட் ஹால்மேன் ஒரு கோலடித்து ஆஸ்திரேலியாவை வலுப்படுத்தினார். இதனால் செர்பியா சிக்கலில் மூழ்கியது.

இருப்பினும் விடா முயற்சியுடன் ஆடிய அந்த அணிக்கு 84வது நிமிடத்தில் கோல் வாய்ப்பு அமைந்தது. மார்கோ பான்டெலிக் ஒரு கோலடித்து செர்பியாவை ஆறுதல்பபடுத்தினார். ஆனால் அது போதுமானதாக இல்லை. போட்டி முடிவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமானது.

இந்தப் போட்டியில் வென்றும் கூட ஆஸ்திரேலியாவால் நாக் அவுட் ரவுண்டுக்குப் போக முடியாமல் போய் விட்டது.

டி பிரிவில் ஜெர்மனி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. கானாவும், ஆஸ்திரேலியாவும் தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால் கோல்கள் வித்தியாசத்தில் கானா 2வது இடத்தைப் பிடித்து விட்டது. இதனால் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு ஆஸ்திரேலியா வெளியேற்றப்பட்டது. நான்காவது இடம் செர்பியாவுக்கு.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+