தப்பிப் பிழைத்தது இங்கிலாந்து

தனது முதல் இரு ஆட்டங்களில் அமெரிக்கா, அல்ஜீரியாவுடன் டிரா செய்து கஷ்டமான நிலையில் இருந்தது இங்கிலாந்து. ஆனால் நேற்றைய வெற்றி அந்த அணிக்கு ஆக்சிஜன் கொடுத்து நாக் அவுட் ரவுண்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 23வது நிமிடத்தில் ஜெர்மைன் டிஃபோ போட்ட கோலால் இங்கிலாந்துக்குக் கெளரவம் கிடைத்தது.
அதேசமயம், குரூப்பிலேயே முதலிடத்தில் இருந்து வந்த ஸ்லோவேனியா ஒரே போட்டியில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. காரணம், அமெரிக்கா தனது போட்டியில் வெற்றி பெற்று விட்டதால் அது முதலிடத்திற்கு முன்னேறியது. 2வது இடம் இங்கிலாந்துக்குக் கிடைத்தது. ஸ்லோவேனியா 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறும் வாய்ப்பையும் பறி கொடுத்து விட்டது.
4 புள்ளிகளுடன் நல்ல நிலையில் இருந்ததால்நேற்றைய போட்டியை நம்பிக்கையுடன் சந்தித்தது ஸ்லோவேனியா. இதனால் ஆட்டத்திலும் அதன் திறமை ஜொலிக்கவே செய்தது.
ஆனால் 23வது நிமிடத்தில் ஜெர்மைன் போட்ட கோல் ஸ்லோவேனியாவை சிதறடித்து விட்டது. அந்த கோலுக்குப் பிறகு இங்கிலாந்து வீரர்கள் துடிப்புடன் ஆட ஆரம்பித்து விட்டனர். இதனால் ஸ்லோவேனியாவால் கோல் போட முடியாமல் போனது.
சி பிரிவில் 3வது இடம் பிடித்த ஸ்லோவேனியாவும், நான்காவது இடத்தில் உள்ள அல்ஜீரியாவும் இத்தோடு மூட்டை கட்டப்பட்டு விட்டன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications