இத்தாலி இன்று வென்றேயாக வேண்டும்

நடப்புச் சாம்பியனான இத்தாலி, எப் பிரிவில் 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல நியூசிலாந்தும் 2 புள்ளிகளுடன் உள்ளது. இன்றைய போட்டியில் இத்தாலி டிரா செய்து, நியூசிலாந்து தனது போட்டியில் வென்று விட்டால் இத்தாலிக்கு கஷ்டமாகி விடும்.
அதேசமயம், நியூசிலாந்தை பராகுவே அணி வென்று விட்டால், இத்தாலிக்கு ஒரு டிரா கூட போதும், ரவுண்ட் 16க்கு போய் விடலாம்.
இப்படி இருக்கிறது இத்தாலியின் நிலை. ஸ்லோவேகியாவுக்கு அப்படி இல்லை. இன்று அவர்கள் இத்தாலியை வென்றாலும் கூட, பராகுவே-நியூசிலாந்து போட்டியின் முடிவைப் பொறுத்துதான் அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது அமையும்.
இத்தாலியும், ஸ்லோவேகியாவும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல. தர வரிசையில், இத்தாலி 9வதுஇடத்திலும், ஸ்லோவேகியா 34வது இடத்திலும் இருந்தாலும் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது இருவரும் கிட்டத்தட்ட சம நிலையிலேயே இருப்பது தெரியும்.
இரு அணிகளும் தலா 9 டிராக்களை வைத்துள்ளன. இத்தாலி 10 முறையும், ஸ்லோவேகியா 8 முறையும் வென்றுள்ளன. இத்தாலி 42 கோல்களை அடித்துள்ளது. ஸ்லோவேகியாவின் கணக்கு 38 ஆகும்.
எனவே இன்றைய போட்டியில் நிச்சயம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications