ஆறுதல் தேடுமா காமரூன்?

அதேசமயம், நாக் அவுட் ரவுண்டுக்கு ஏற்கனவே துண்டு போட்டு விட்ட நெதர்லாந்து, காமரூனையும் காலி செய்து க்ளீன் ரெக்கார்டை பராமரிக்க ஆர்வமாக உள்ளது.
இ பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் போய் விட்டதால் ஆர்வமும் குறைவாகவே இருக்கிறது.
கேப்டவுனில் நடைபெறும் இப்போட்டியால் யாருக்கும் பலனும் கிடையாது, பாதிப்பும் கிடையாது என்பதால் இரு அணிகளுமே கேஷுவலாக விளையாட முடியும். குறிப்பாக நெதர்லாந்துக்கு இந்தப் போட்டி ஒரு பயி்ற்சி ஆட்டம் போல அமையும்.
அதேசமயம், முதல் இரு போட்டிகளிலும் தோல்வியுற்று விட்ட காமரூன், இப்போட்டியில் வெற்றி அல்லது டிராவுக்கு முயற்சிக்கும்.
வெற்றியோ, தோல்வியோ நாங்கள் நல்ல கால்பந்தை விளையாட முயற்சிப்போம். விளையாட்டில் பின்வாங்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறப்பாகவே விளையாடுவோம். வெற்றியைக் குறி வைத்தே ஆடுவோம். இது பிரன்ட்லி மேட்ச் அல்ல. உலகக் கோப்பைப் போட்டி. எனவே அதற்கேற்ப எங்களது ஆட்டம் இருக்கும் என காமரூன் பயிற்சியாளர் பால் லி கியுன் கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications