கடைசி நேர கோலால் அல்ஜீரியாவை வீழ்த்திய அமெரிக்கா

இப்படித்தான் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் கடைசி நேரத்தில் கோலடித்து போட்டியை டிரா செய்து முன்பு இங்கிலாந்தை அப்செட் செய்திருந்தது அமெரிக்கா. நேற்றைய போட்டியில், அதே பாணியில் கோலடித்து அல்ஜீரியாவை வீழ்த்தி விட்டது.
90 நிமிட ஆட்டம் முடிந்த நிலையில், ஸ்டாப்பேஜ் டைமில், முதல்நிமிடத்தில் ஒரு கோலடித்து போட்டியின் முடிவையே மாற்றி விட்டார் டோனவான். இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்று விட்டது.
இரு அணிகளும் கோலடிப்பதற்காக தொடக்கம் முதல் கடுமையாக முயன்றன. ஆனால் கை கூடவில்லை. இந்த நிலையில் 90 நிமிட ஆட்ட நேரம் முடிந்து, ஸ்டாப்பேஜ் நேரம் ஆரம்பித்த முதல் நிமிடத்தில் டோனவான் அபாரமான கோலடித்து அல்ஜீரியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் மைதானமே வியப்பில் ஆழ்ந்தது.
இந்த அதிரடி வெற்றியின் மூலம் 5 புள்ளிகளுடன் சி குரூப்பில் முதலிடத்தைப் பிடித்தது அமெரிக்கா. நாக் அவுட் ரவுண்டுக்கும் முன்னேறியது. அதேசமயம், கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்ட அல்ஜீரியா அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications