நியூசி.யை முடக்குமா பராகுவே?

1982ம் ஆண்டுக்குப் பிறகு இப்போது விளையாட வந்திருக்கும் அணி நியூசிலாந்து. குறைந்த அனுபவத்துடன் கூடிய இந்த அணி தனது முதல்இரு போட்டிகளிலும் வெற்றி பெற முடியாவிட்டாலும் கூட டிரா செய்து அனைவரையும் கவர்ந்தது.
ஸ்லோவேகியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி நிமிடத்தில் ஒரு கோலடித்து தோல்வியிலிருந்து தப்பி டிராவில் முடித்தது.
2வது போட்டியில் இத்தாலிக்கு எதிராக விளையாடியபோது முதலில் கோலடித்து அனைவரையும் அதிர வைத்தது. இருப்பினும் இப்போட்டியும் பின்னர் டிராவில் முடிந்தது.
நம்பிக்கையுடன் ஆடும் நியூசிலாந்தை, வலிமையான பராகுவே வீழ்த்தும் என்ற கருத்து பொதுவாக இருந்தாலும், நியூசிலாந்து அவ்வளவு சீக்கிரம் வீழ்ந்து விடாது என்ற பேச்சும் உள்ளது.
இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கு நாக் அவுட் ரவுண்டுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்குப் போராடும். அதிலும் நியூசிலாந்து கடுமையாகவே போராடும் என்பதில் ஐயமில்லை.
நியூசிலாந்தின் ஸ்டார் வீரராக ஷான் ஸ்மெல்ட்ஸ் விளங்குகிறார். அதேபோல பராகுவேயில் அன்டோலின் அர்கராஸ் இருக்கிறார்.
தென் அமெரிக்காவின் வலிமை வாய்ந்த அணிகளில் ஒன்றான பராகுவேயை வீழ்த்தி நியூசிலாந்து இன்று சாதனை படைக்குமா அல்லது நியூசிலாந்தின் இறகுகளை பராகுவே பறிக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications