Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வட கொரியாவுடன் இன்று மோதல்-கோல் மழை பொழியுமா ஐவரி கோஸ்ட்?

Ivory Coast Players
பிரேசிலிடமிருந்து போராடித் தப்பி, போர்ச்சுகலிடம் சிக்கி சின்னாபின்னமாகி இப்போது ஐவரி கோஸ்ட்டிடம் வந்துள்ளது வட கொரியா. அந்த அணியை போர்ச்சுகல் போல மாறி கோல் மழை பொழிந்து வென்றால்தான் நாக் அவுட் ரவுண்டு குறித்து நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலையில் இருப்பதால் ஐவரி கோஸ்ட் இன்றைய போட்டியில் படு தீவிரமாக ஆட தயாராகி வருகிறது.

ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் பிரேசில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் தற்போது போர்ச்சுகல் உள்ளது. 3வது இடத்தில் ஐவரி கோஸ்ட் இருக்கிறது. ஒரு புள்ளியும் பெறாத வட கொரியா நான்கவது இடத்தில் இருக்கிறது.

ஐவரி கோஸ்ட் நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேற வேண்டுமானால் இரண்டு நடந்தாக வேண்டும் - போர்ச்சுகல் கோலே போடாமல் பிரேசிலிடம் படு தோல்வி அடைய வேண்டும். 2வது - நிறைய கோல்களைப் போட்டு வட கொரியாவை ஐவரிகோஸ்ட் தோற்கடிக்க வேண்டும்.

இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலுடன் வட கொரியாவை சந்திக்கிறது ஐவரி கோஸ்ட். இன்றைய ஆட்டத்தில் சூப்பர்ஸ்டார் டிரோபாவின் புயல் வேக ஆட்டத்தையே ஐவரி கோஸ்ட் முழுமையாக நம்பியுள்ளது.

இதுவரை நடந்த போட்டிகளில் அவமானப்பட்டுள்ள வட கொரியா, தனது கடைசி சுற்றுப் போட்டியில் பிரமாதமான வெற்றியைப் பெற்று அவமானத்தைத் துடைத்து ஆறுதலைப் பெற முயலும் என்பதால் இன்றைய போட்டியி்ல ஐவரி கோஸ்ட்டைப் புரட்டி எடுக்க முயலும் என்பதால் போட்டி கடு்மையாகவே இருக்கும் என்று தெரிகிறது.

இன்றைய ஆட்டத்தில் டிரோபா தவிர சியாகா டியன், எம்மானுவல் எபோ, யாயா டூரே, சாலமோன் கலு ஆகியோரும் சேர்ந்து ஒருங்கிணைந்து நெருக்கடி கொடுத்தால், வட கொரியாவுக்கு பெரும் சிக்கலாக அமையும்.

மறு பக்கம், வட கொரியாவின் அவமானத்தைத் துடைக்கும் வகையில் வியூகம் அமைத்து ஐவரி கோஸ்ட்டை வீழ்த்த தங்களது அணி தயாராக இருப்பதாக கேப்டன் ஹாங் யாங் ஜோ கூறியுள்ளார். பாக் நாம் சோல், முன் இன் குக், ஜோங் டே சே ஆகியோர் முனைப்புடன் உள்ளனர். வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாகப் பயன்படுத்தி கோலாக்க இவர்கள் சிறப்புப் பயிற்சி எடுத்துள்ளதாக கேப்ன் ஹாங் கூறுகிறார்.

போட்டி குறித்து ஐவரி கோஸ்ட் டிபென்டர் டிடியர் ஸோகோரா கூறுகையில், நாங்கள் நாக் அவுட் ரவுண்டுக்குச் செல்ல ஆர்வமாக உள்ளோம். அது கடினமானது என்பது தெரிகிறது. ஆனாலும், விடாமல் போராடவுள்ளோம். இந்தப் போட்டியில் 7 முதல் 9 கோல்கள் வரை நாங்கள் போட்டால்தான் உண்டு. இது சொல்வதற்கு எளிது. ஆனால் போட்டாக வேண்டும். முடிந்தவரை முயற்சிப்போம். கால்பந்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.

ரசிகர்களின் கருத்தும் அதுவாகவே உள்ளது. இன்றைய போட்டியில் 8-0 என்ற கோல் கணக்கில் ஐவரி கோஸ்ட் வெல்லும் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஐவரி கோஸ்ட் கரையேறுமா, பார்க்கலாம்?
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+