நெதர்லாந்து 'பக்கா'

நேற்று நடந்த தனது கடைசி சுற்றுப் போட்டியில், காமரூனை சந்தித்தது நெதர்லாந்து. ஏற்கனவே முதலிடத்தில் இருந்து வரும் நெதர்லாந்து, நேற்றைய போட்டியிலும் நீட்டாக ஜெயித்து 9 புள்ளிகளுடன் வலுவான நிலையுடன் ரவுண்ட் 16க்கு முன்னேறியுள்ளது.
மறுமுனையில் காமரூன் அணி தனது தொடர்ச்சியான 3வது தோல்வியை நேற்று சந்தித்தது. ஒரு புள்ளி கூட எடுக்காமல் காமரூன், போட்டித் தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
நெதர்லாந்து அணியில் நேற்று அர்ஜென் ராபன் களம் இறங்கி கலக்கி விட்டார். அவரது ஆட்டம் அணிக்கு பெரும் உதவியாக அமைந்தது.
நேற்று நெதர்லாந்துக்காக கோலடித்தவர்கள் சூப்பர் ஸ்டார் ராபின் வான் பெர்சியும், கிளாஸ் ஜான் ஹன்டெலாரும். காமரூன் போட்ட ஒரு கோலை சூப்பர் ஸ்டார் எட்டோ அடித்தார்.
ஏற்கனவே நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறி விட்டதால் நெதர்லாந்து கேஷுவலாக ஆடும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இது கிரிக்கெட் இல்லையே, கால்பந்தாச்சே. எனவே நேற்று படு ஆக்ரோஷமாகவே மோதியது நெதர்லாந்து.
அதேசமயம், காமரூன் அணி எதையோ பறி கொடுத்தவர்கள் போலவே ஆடினார்கள். ஆட்டத்தில் ஒரு வேகம் இல்லை. இருப்பினும் வெல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தியுடன் அது ஆடியது.
முதல் பாதி ஆட்டத்தின்போது 36வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நெதர்லாந்தின் பெர்சி கோலடித்தார். தொடர்ந்து 2வது பாதி ஆட்டத்தில் 65வது நிமிடத்தின்போது காமரூனின் எட்டோ, பெனால்டி வாய்ப்பை பனயன்படுத்தி கோலடித்தார்.
இதனால் சம நிலை ஏற்பட்டது. இருப்பினும் நெதர்லாந்தின் ஹன்டெலார் 83வது நிமிடத்தில் ஒரு கோலடித்து நெதர்லாந்துக்கு நிம்மதியைக் கொடுத்தார்
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications