கோலே போடாமல் டிரா செய்து நியூசிலாந்தை விரட்டியடித்த பராகுவே

போட்டித் தொடரிலிருந்து நியூசிலாந்து வெளியேறினாலும் கூட ஒரு தோல்வியையும் சந்திக்காமல், அது வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலிறுதிக்காகவது போய் விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஆடி வரும் பராகுவே நேற்றைய போட்டியில் படு உஷாராக ஆடியது. டிரா ஆனாலும் பரவாயில்லை, தோற்று மட்டும் போய் விடக் கூடாது என்ற வேகத்தில் அது ஆடி வந்தது.
அது எதிர்பார்த்தது போலவே போட்டி டிராவில் முடிந்தது. 5 புள்ளிகளுடன் முதலிடத்தையம் பிடித்து இப்போது ரவுண்ட் 16க்குள் போய் விட்டது.
மீசையில் மண் ஒட்டாமல் என்ற வார்த்தைக்கு நியூசிலாந்துதான் சரியான பொருத்தம். ஒரு தோல்வியும் அடையாமல், அனைத்துப் போட்டிகளையும் டிரா செய்து விட்டு ஜகா வாங்கியுள்ளனர் நியூசிலாந்து வீரர்கள்.
இதுகுறித்து அணி பயிற்சியாளர் ரிக்கி ஹெர்பர்ட் கூறுகையில், நான் பெருமைப்படுகிறேன். யாரும் எங்களைத் தோற்கடிக்கவில்லை. இது நிச்சயம் பெரிய விஷயம். எனது அணி செய்திருப்பது பெரிய சாதனை. ஏமாற்றமாக இருந்தாலும் பெரிய சாதனையுடன் நாங்கள் நாடு திரும்புகிறோம் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications