Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பெயின் கனவை சிதைக்குமா சிலி?

Spain Players
ஹோண்டுராஸிடம் சுவிட்சர்லாந்து தோற்க வேண்டும். சிலியை ஸ்பெயின் வெல்ல வேண்டும். இரண்டும் நடந்தால்தான் நம்பர் 2 அணியான ஸ்பெயின் நாக் அவுட் ரவுண்டுக்குப் போக முடியும்.

சூப்பர் ஸ்டார் அணிகளுக்கு இந்த உலகக் கோப்பைப் போட்டி செம எரிச்சலாக மாறியுள்ளது. முதலில் பிரான்ஸ் வெளியேறியது. நேற்று நடப்புச் சாம்பியன் இத்தாலி காலியானது. இன்று ஸ்பெயின் பெரும் சோதனையை சந்திக்கிறது.

தனது முதல் இரு போட்டிகளில் ஒன்றில் மட்டும் ஜெயித்து, இன்னொன்றை கோட்டை விட்டதால், தற்போது ஸ்பெயினுக்கு சிக்கலாகியுள்ளது.

3 புள்ளிகளுடன் தனது குரூப்பில் 2வது இடத்தில் உள்ளது ஸ்பெயின். மாறாக சிலி தனது இரு போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் ஜம்மென்று அமர்ந்துள்ளது. சுவிட்சர்லாந்தும் 3 புள்ளிகளுடன் இருப்பதால் ஸ்பெயினுக்கு நெருக்கடியாகியுள்ளது.

எனவே இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே ஸ்பெயின் நாக் அவுட் ரவுண்டு குறித்து நினைத்துப் பார்க்க முடியும்.

ஸ்பெயினும், சிலியும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. இதில் 6 போட்டிகளில் ஸ்பெயினே வென்றுள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது. ஸ்பெயின் 18 கோல்களை அடித்துள்ளது. 3 கோல்களை சிலி போட்டுள்ளது. இந்த புள்ளி விவரம் ஸ்பெயினுக்கு சாதகமாக தெரிந்தாலும், நடப்பு நிலவரம் அப்படி ஒன்றும் பிரமாதமானதாக இல்லை.

ஸ்பெயினின் டேவிட் வில்லாவும், சிலியின் கிளாடியோ பிரேவோவும் புயலாக மாறினால் இரு அணிகளுக்கும் நெருக்கடிதான்.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியின்போது 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வென்றது. இருகோல்களையும் வில்லாவே அடித்தார். இன்றைய போட்டியிலும் வில்லா விஸ்வரூபம் எடுத்தால்தான் ஸ்பெயினுக்கு நல்லது. ஆனால் பிரேவோ என்ற தூண் அச்சுறுத்தலாக இருப்பதால் வில்லா எப்படி வியூகம் வகுக்கப் போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

ஸ்பெயின் பார்வர்ட் வீரர் பெர்னாண்டோ டாரஸ் கூறுகையில், சிலிக்கு டிரா ஆனாலே போதுமானது. அதேசமயம், எங்களுக்கு வெற்றி அவசியம். அவர்கள் போட்டியை விட்டுக் கொடுக்காமல் விளையாடக்கூடியவர்கள். நாங்களும் போராடக் கூடியவர்கள். முடிவு, இரு தரப்பின் ஆட்டத்தையும் பொறுத்தது என்கிறார்.

சிலி ரசிகர் ஒருவரின் கருத்து இது - ஸ்பெயின் அனைவரின் மனம் கவர்ந்த அணி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சிலி வீரர்களிடம் உள்ள கமிட்மென்ட், விடா முயற்சி, தன்னம்பிக்கை ஸ்பெயின் வீரர்களிடம் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பத்திற்காகத்தான் நாங்கள் காத்திருந்தோம். எனவே இன்றைய போட்டியில் சிலி சாதிக்க முயற்சிக்கும் என்கிறார்.

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் ஸ்பெயின் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறுவதே அக்கப் போராகியுள்ளது. இந்தப் போரில் அது வெல்லுமா?. இன்று இரவு தெரியும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+