Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாக் அவுட்டுக்கு முன்னேற தடையாக நிற்கும் ஹோண்டுராஸ்-வெல்லுமா சுவிஸ்?

Swiss players with Coach Ottmar Hitzfeld
இன்றைய எச் பிரிவு ஆட்டங்களில் ஒன்றான சுவிட்சர்லாந்து, ஹோண்டுராஸ் இடையிலான ஆட்டம் விறுவிறுப்பானதாக இருக்கும். புள்ளிகள் அடிப்படையில் 3வது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்தும், ஒரு புள்ளி கூட எடுக்காமல் கடைசியில் இருக்கும் ஹோண்டுராஸும், நாக் அவுட் ரவுண்டுக்கு போக தீவிரமாக இருப்பதால் ரசிகர்களுக்கு நல்ல போட்டியைக் காணும் பாக்கியம் கிடைக்கும்.

எச் பிரிவில் சிலி மட்டுமே தற்போது வலுவான நிலையில் உள்ளது. 2வது இடத்திற்கு முன்னேற ஸ்பெயினுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஹோண்டுராஸைப் பொறுத்தவரை தனது முதல் இரு போட்டிகளிலும் தோற்று முட்டையுடன் உள்ளது. ஆனாலும் 2வது இடத்திற்கு கடும் போட்டி இருப்பதால் அதைப் பயன்படுத்தி உள்ளே புகுந்து சந்தில் சிந்து பாடி விட முயற்சிக்கிறது.

சுவிட்சர்லாந்துக்கு அப்படியில்லை. இதில் அது வென்று, சிலியிடம் ஸ்பெயின் தோற்று விட்டால் 2வது இடம் உறுதியாகி விடும். எனவே வெற்றிக்கு தீவிரமாக அது முயலும்.

ஹோண்டுராஸும், சுவிட்சர்லாந்தும் மோதுவது இதுவே முதல் முறையாகும். ஹோண்டுராஸ் இந்த ஆண்டு ஒரு வெற்றியைக் கூட பெற்றதில்லை. பெலாரஸுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அதேசமயம், துருக்கி (0-2), வெனிசூலா (0-1), ருமேனியா (0-3) ஆகிய அணிகளுடன் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. அஜர்பைஜானுடன் கோலே போடாமல் டிரா செய்தது. இந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இதுவரை ஒரு கோல் கூட போடாமல் உள்ளது.

சூப்பர் ஸ்டார் பலசியோஸ் ஹோண்டுராஸுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவார் என நம்பலாம். அதேபோல சுவிட்சர்லாந்துக்கு கோகன் இன்லர் இருப்பார்.

இன்றைய போட்டியில் அதிசயம் நடந்தால் ஹோண்டுராஸ் வெல்லலாம், நாக் அவுட் ரவுண்டுக்கும் போகலாம். 2006 உலகக் கோப்பையில் காட்டிய அசகாய சூரத்தை இம்முறை காட்டினால் சுவிட்சர்லாந்தும் நாக் அவுட்க்கு முன்னேறலாம்.

எது நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+