Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிறடித்த பிரேசில்!

Brazil
நாக் அவுட் ரவுண்டில் இப்படி விளையாடினால் ரொம்பக் கஷ்டம். இது நேற்று போர்ச்சுகல் அணியுடன் ஆடிய பிரேசிலைப் பார்த்து ரசிகர்கள் கூறிய விரக்தியான கமென்ட். அப்படி ஒரு ஆட்டம் ஆடியது பிரேசில் நேற்று.

முக்கால்வாசி நேரம் பந்து அவர்களது கால்களுக்குள்தான் இருந்தது. உண்மைதான். கோல் போடவும் தீவிரமாக முயற்சித்தார்கள், அதுவும் வாஸ்தவம்தான். ஆனால் போர்ச்சுகல் அணியின் தடுப்பைத் தகர்த்து உள்ளே புகுந்து ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை என்று பிரேசில் கூறினால் எப்படி ரசிகர்கள் ஏற்பார்கள். அதுவும் பிரேசில் இப்படி ஆடலாமா.

நேற்று நடந்த போட்டி மகா போரான ஒன்றாக மாறியிருந்தது. இரு அணியினரும் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. உண்மையில் நேற்று போர்ச்சுகல் ஆடியது ஒரு வீரனுக்கு அழகல்ல. முழுக்க முழுக்க தடுப்பாட்டத்திற்கு மாறி விட்டது போர்ச்சுகல்.

பிரேசில் எப்படியும் கோலடித்து விடும். அப்படி நடந்தால் நமக்கு கஷ்டமாகி விடும் என்று நினைத்த போர்ச்சுகல் முழுமையான தடுப்பாட்டத்திற்குப் போய் விட்டது. இதனால் பிரேசில் வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

நேற்றைய ஆட்டத்தில் ஸ்டார் வீரர் ககா இல்லாதது பிரேசிலுக்கு பெரும் சிக்கலாகி விட்டது. அதேசமயம், அவர்கள் கோலடிக்க தீவிரமாக முயன்றது போலவும் தெரியவில்லை.

90 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு கோல் கூட போட முடியவில்லை.

வலிமை வாய்ந்த பிரேசில், நம்பர் ஒன் அணி பிரேசில், கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ள பிரேசில் இப்படி ஒரு கோல் கூட போடாமல் ஆட்டத்தை முடித்தது ரசிகர்களை மட்டுமல்ல அவர்களது பயிற்சியாளர் துங்காவையும் கூட துக்கத்தில் ஆழ்த்தி விட்டது.

போட்டி முடிவு குறித்து துங்கா கூறுகையில், இது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. நாங்கள் எப்போதுமே வெல்ல வேண்டும் என்பதற்காகவே விளையாடுவோம். ஆனால் போர்ச்சுகல் அணி முழுமையான டிபென்சில் இறங்கியது சரியல்ல. இது அழகும் அல்ல. போட்டியை டிரா செய்யவே அவர்கள் முயன்றனர் என்றார் கடுப்பாக.

போர்ச்சுகலிடம் இப்படி பிரேசில் திணறினால் நாக் அவுட் ரவுண்டில் என்ன செய்யப் போகிறதோ என்று ரசிகர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய டிரா மூலம் இரு அணிகளுக்கும்எந்தப் பாதகமும் ஏற்படவில்லை. பிரேசில் ஏற்கனவே ரவுண்ட் 16க்குப் போய் விட்டது. போர்ச்சுகலும் நேற்று வெற்றிகரமாக நுழைந்து விட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+