For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வட கொரியாவை வலுவாக வீழ்த்தியும் நாக் அவுட்டுக்கு முன்னேற முடியாத ஐவரி கோஸ்ட்

Romaric of the Ivory Coast
கோல் போடுவதற்காக வரவில்லை, வாங்குவதற்காகவே வந்தோம் என்பதை வடகொரியா நேற்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டது. போர்ச்சுகலிடம் 7 கோல் வாங்கிய வட கொரியா நேற்று ஐவரிகோஸ்ட்டிடம் 3 கோல் வாங்கி படு தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்வியால் வட கொரியாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏற்கனவே அது நாக் அவுட் ரவுண்டுக்கு வர முடியாத நிலையை எட்டி விட்டது. ஆனால் ஐவரி கோஸ்ட்தான் 3 கோலடித்து வென்றும் கூட நாக் அவுட் ரவுண்டுக்குப் போக முடியாமல் நாடு திரும்ப நேரிட்டுள்ளது.

நேற்றைய போட்டியில், அதிக அளவில் கோலடித்து வட கொரியாவை வென்றால்தான் நாக் அவுட் ரவுண்டுக்குப் போக முடியும், மேலும் பிரேசிலில் அணியும் போர்ச்சுகலை வெல்ல வேண்டும் என்ற நிலை. ஆனால் இரண்டுமே நடக்கவில்லை. பிரேசில்-போர்ச்சுகல் ஆட்டம் டிராவாகி விட்டது. ஐவரி கோஸ்ட்டும் 3 கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் வென்றும் பலன் இல்லாமல் ஐவரி கோஸ்ட், நாக் அவுட் ரவுண்டுக்குப் போக முடியாமல் போய் விட்டது.
வட கொரியாவை வலுவாக வீழ்த்தியும் நாக் அவுட்டுக்கு முன்னேற முடியாத ஐவரி கோஸ்ட்

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஐவரி கோஸ்ட் அருமையாக ஆடியது. பிரேசில்-போர்ச்சுகல் ஆட்டத்தை விட ஐவரி கோஸ்ட்-வட கொரியா ஆட்டம் அருமையாக இருந்தது. முதல் பாதியிலேயே யாயா டுரே, ரொமாரிக் ஆகியோர் தலா ஒருகோலடித்து விட்டனர். 2வது பாதியின் இறுதியில் கலு ஒரு கோலடித்து ஐவரி கோஸ்ட்டை வலுவாக்கி விட்டார்.

நேற்றைய ஆட்டத்தின் இறுதியில், ஜி பிரிவில் பிரேசில் முதலிடத்தையும், போர்ச்சுகல் 2வது இடத்தையும், ஐவரி கோஸ்ட் 3வது இடத்தையும் பிடித்தன.

9 கோல்கள் அடித்தால்தான் நாக் அவுட் குறித்து நினைத்துப் பார்க்க முடியும் என்ற மகா கஷ்டமான நிலையில்ஆடப் புகுந்த ஐவரி கோஸ்ட் அந்த இலக்கை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருந்தது. இருந்தாலும் 3 கோல்கள் மட்டுமே அதனால் அடிக்க முடிந்தது. முடியாத இலக்கு என்றாலும் கூட ஐவரி கோஸ்ட் வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் ரசிகர்களினம் மனதைப் பறித்து விட்டது.

முடியாது என்று தெரிந்தும் அவர்கள் எடுத்த முயற்சிகளும், காட்டிய வேகமும், இப்படி ஒரு அணி வெளியேறி விட்டதே என்ற வருத்தத்தையே ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X