தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரில் இன்று முதல் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அரங்கேறவுள்ளன. இனிமேல்தான் அருமையான கால்பந்துப் போட்டிகளை ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள் என்று கூடக் கூறலாம். காரணம், இதில் வெற்றி பெற்றால்தான் உண்டு. தோற்றால் அடுத்த பிளைட்டில் ஊருக்குப் போய் விட வேண்டியதுதான்.
உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிந்து விட்டன. தற்போது 16 வலுவான அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
அந்த 16 அணிகளும் இன்று முதல்மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும். மீதமுள்ள 8 அணிகள் வெளியேறும்.
இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், தென் கொரியாவும், உருகுவேயும் மோதுகின்றன. இரவு 11.50 மணிக்கு நடைபெறும் இன்னொரு போட்டியில் கானாவும், அமெரிக்காவும் மோதவுள்ளன.
பிற போட்டிகள்
ஜூன் 27 - ஜெர்மனி-இங்கிலாந்து, அர்ஜென்டினா-மெக்சிகோ
ஜூன் 28- நெதர்லாந்து-ஸ்லோவேகியா, பிரேசில்- ஸ்பெயின்
ஜூன் 29 - பராகுவே-ஜப்பான், போர்ச்சுகல்-சிலி
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]