சிலியை வென்று தப்பியது ஸ்பெயின்-சிலியும் நாக் அவுட்டுக்குள் நுழைந்தது

டேவிட் வில்லாவும், ஆன்ட்ரியஸ் இனியஸ்டாவும் ஸ்பெயினுக்கான கோலைப் போட்டனர். அதேசமயம் சிலிக்காக ரோட்ரிகோ மில்லர் ஒரு கோலடித்தார்.
ஆட்டத்தின் 24 வது நிமிடத்தில் வில்லா முதல் கோலை அடித்தார். 37வது நிமிடத்தில் இனியஸ்டா கோல் போட்டார். இருப்பினும் 2வது பாதி ஆட்டத்தில் சிலி சற்று சுதாரிப்போடு ஆடியது. இதனால் ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே அதாவது 47வது நிமிடத்தில் மில்லர் ஒரு கோல் போட்டு சிலிக்கு நம்பிக்கையூட்டினார்.
ஆனால் அதன் பின்னர் மேலும் கோல் ஏதும் விழாத வகையில் இரு அணியினரும் சுதாரிப்போடு ஆடியதால் போட்டி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினுக்கு சாதகமாக முடிந்தது.
ஜி பிரிவில் இடம் பெற்றிருந்த சிலி முதலிடத்தைப் பிடித்ததாலும், 2வது இடத்திற்கு ஸ்பெயின் வந்ததாலும் எளிதாக நாக் அவுட் ரவுண்டுக்குள் போய் விட்டன.
அதேசமயம், சுவிட்சர்லாந்து 3 புள்ளிகளை எடுத்திருந்தாலும், கோல்கள் அடிப்படையில் ஸ்பெயின் முன்னணியில் இருந்தாதல் அதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஹோண்டுராஸ் ஒரு புள்ளி கூட எடுக்காமல் வெளியேறியது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications