Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுவிட்சர்லாந்தை சோதித்த ஹோண்டுராஸ்

Maynor Figueroa of Honduras and Eren Derdiyok of Switzerland
ஹோண்டுராஸின் அட்டகாசமான டிபன்ஸைத் தாண்டி ஒரு கோல் கூட போட முடியாமல் டிரா செய்து தனது கனவு கானல் நீரான விரக்தியுடன் உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது சுவிட்சர்லாந்து.

இப்போட்டியில் சுவிட்சர்லாந்து வென்றிருந்தால், 2வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அது தகுதி பெற்றிருக்க முடியும். ஆனால் ஹோண்டுராஸ் சோதித்து விட்டதால் கோலே இல்லாத டிராவில் போட்டி முடிந்து விட்டது.

நேற்றைய போட்டியின் இறுதியில், சுவிட்சர்லாந்து அணி 4 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடிக்க நேர்ந்தது. ஹோண்டுராஸ் ஒரு புள்ளியுடன் 4வது இடததைப் பிடித்தது.

உலகக் கோப்பைப் போட்டியில் சுவிட்சர்லாந்து பங்கேற்றது இது 9வது முறையாகும். எப்படியாவது காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்காவது முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் இங்கு வந்தது சுவிட்சர்லாந்து. அதற்கேற்ப சிறப்பாகவும் ஆடியது. ஆனால் சோதனையாக ஹோண்டுராஸ் ரூபத்தில் அதன் முன்னேற்றம் தடுக்கப்பட்டு தற்போது வெளியேறியுள்ளது.

கடந்த 2006 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குப் போனது சுவிட்சர்லாந்து. ஆனால் அந்த போட்டியில் உக்ரைனிடம் தோல்வியுற்றதால், காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+