For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கானாவின் 'எக்ஸ்ட்ரா' அசத்தல்-காலிறுதியில்!

Asamoah Gyan of Ghana
எக்ஸ்ட்ரா நேரத்தில் கானாவின் அசமோ கியான் போட்டஅபாரமான கோலால் அமெரிக்கா தோல்வியைச் சந்தித்து வெளியேறியது. கானா காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

நேற்று நடந்த 2வது காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவும், கானாவும் மோதின. இரு அணிகளுமே சம பலத்துடன் கூடியவை என்பதால்வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

அதற்கேற்ப நேற்றைய 90 நிமிட முழு ஆட்ட நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சம நிலையை எட்டியிருந்தன. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் கானா வீரர் கியான் அபாரமான கோலைப் போட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

ரஸ்டன்பர்க்கில் நடந்த இந்தப் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

கூடுதல் நேரம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே அதாவது 93வது நிமிடத்தில் கியான் கோலடித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இடம் பெற்றுள்ள ஒரே ஆப்பிரிக்க அணி கானா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கானாவின் காலிறுதித் தகுதி ஒட்டுமொத்த ஆப்பிரிக்க ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜூலை 2ம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் உருகுவேயை எதிர்த்து மோதவுள்ளது கானா.

கடந்த 1990ம் ஆண்டு காமரூனும், 2002ம் ஆண்டு செனகலும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஆப்பிரிக்க அணிகளாக இருந்தன. அதன் பின்னர் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளது கானா.

நேற்று போட்டி தொடங்கிய 5வது நிமிடத்திலேயே கானா வீரர் கெவின் பிரின்ஸ் போடெங் கோலடித்து அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைத்தார்.

அதற்குப் பின்னர் 62வது நிமிடத்தில்தான் அமெரிக்கா அதை சமன் செய்தது. லேன்டன் டோனவான் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்தார்.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் போட்டி சம நிலையை எட்டியது. இதையடுத்து கூடுதல் நேரம் தரப்பட்டு இரு அணிகளும் ஆடின. அதில் கோலடித்து கியான் அணியை கரை சேர்த்து விட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+