நெதர்லாந்து-ஸ்லோவேகியா: சுவாரஸ்ய மோதல்!

ஸ்லோவேகியா முதல் முறையாக உலகக்கோப்பைப் போட்டிக்கு வந்துள்ளது. நெதர்லாந்து அனுபவம் வாய்ந்த ஒரு அணி. இதில் ஸ்லோவேகியா வென்றால் புதிய சாதனை படைக்கும்.
அனுபவம் வாய்ந்த ஒரு அணியும், கத்துக்குட்டி அணியும் மோதும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. ஒருவேளை ஸ்லோவேகியா அசத்துமோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இ பிரிவில் இடம் பெற்றிருந்த நெதர்லாந்து, தனது முதல் போட்டியில் டென்மார்க்கை 2-0 என்ற கணக்கிலும், ஜப்பானை 1-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 3வது போட்டியில், காமரூனை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மறுபக்கம் கத்துக்குட்டியான ஸ்லோவேகியா, நடப்புச் சாம்பியன் இத்தாலியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி அனைவரையும் தன் பக்கம் வியப்புப் பார்வையை திருப்ப வைத்த அணியாகும்.
நெதர்லாந்து அணியின் மிகப் பெரிய பலமாக அர்ஜென் ராபன் இருக்கிறார். இருப்பினும் இவருக்கு ஸ்லோவேகியா சரியான தடுப்புகளைப் போட்டு விட்டால் ஸ்லோவேகியாவுக்கு அது பெரிய பலமாகி விடும்.
சுதந்திர நாடான பின்னர் ஸ்லோவேகியா முதல் முறையாக உலகக் கோப்பைப் போட்டிக்கு வந்துள்ளதால் அந்த நாட்டு ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். அதேசேயம், ஸ்லோவேகியா பிரியாமல், செக்கோஸ்லேவகியாவாக இருந்தபோது 1938ல் நடந்த போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து தோல்வியுற்றுள்ளது. எனவே ஸ்லோவேகியாவிடம் அதுபோன்று நிகழ்ந்து விடாமல் கவனமாக இருக்க அது முயலும்.
இத்தாலியும், ஸ்லோவேகியாவும் மோதிய போட்டியைப் போல இன்றைய போட்டி மாறினால் ரசிகர்களுக்கு செமத்தியான விருந்து கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்னொரு இத்தாலியாக நெதர்லாந்து மாறுமா அல்லது ஸ்லோவேகியாவை அடக்கி ஒடுக்குமா?
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications