'மின்னல்' போட்டி-பின்னப் போவது யார்?

உலகத் தர வரிசையில் ஸ்பெயின் 2வது இடத்திலும், போர்ச்சுகல் 3வது இடத்திலும் உள்ளன.
கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக ஸ்பெயின் கருதப்படுகிறது. அதேபோல போர்ச்சுகலும் ரசிக்ர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வருகிறது.
தங்களது லீக் போட்டிகளில் கடுமையான மோதல்களை சந்தித்து விட்டு இந்த சுற்றுக்கு இரு அணிகளும் வந்து சேர்ந்துள்ளன.
தனது முதல் போட்டியிலேயே சுவிட்சர்லாந்திடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது ஸ்பெயின். இதையடுத்து ஹோண்டுராஸ், சிலியுடன் கடுமையாக மோதிய பின்னரே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வர முடிந்தது ஸ்பெயினால்.
போர்ச்சுகல் அணி, வட கொரியாவுக்கு எதிரான அணியில் பொறிந்து தள்ளி கோல் மழை பொழிந்தது. 7 கோல்களைப் போட்டு அசத்தியது அப்போட்டியில் போர்ச்சுகல். பிரேசிலுடன் மோதி கோலே இல்லாமல் டிரா செய்து தப்பியது.
ஸ்பெயின் ஸ்டார் டேவிட் வில்லாவும், போர்ச்சுகல் சூப்பர் ஸ்டார் ரொனால்டோவும் இன்று மோதிக் கொள்ளப் போவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
வில்லா இந்த தொடரில் இதுவரை 3 கோல்கள் போட்டுள்ளார். உலகக் கோப்பைப் போட்டிகளில் அவரது மொத்த கோல்களின் எண்ணிக்கை 6 ஆகும்.
மாறாக ரொனால்டோ இதுவரை ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் போர்ச்சுகல் ஆடிய மூன்று போட்டிகளிலுமே இவர்தான் ஆட்ட நாயகன்.
இரு அணிகளும் இதுவரை மொத்தம் 33 போட்டிகளில் மோதியுள்ளன. இதில்ஸ்பெயின் 15 வெற்றிகளையும், போர்ச்சுகல் 5 வெற்றிகளையும் வைத்துள்ளன.
ஸ்பெயின் அணியைப் போலவே போர்ச்சுகலும் செம வலுவாக உள்ளது. ரொனால்டோ மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அணியும் அட்டகாசமாக ஆடி வருகிறது. எனவே இன்றைய போட்டி நிச்சயம் பொறி பறக்கும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications