For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் இன்று 4 போட்டிகள்

By Veera Kumar

ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நான்கு போட்டிகள் நடக்கின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் கடந்த 12ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 13ம்தேதிவரை கால்பந்து திருவிழா ரசிகர்களால் கொண்டாடப்பட உள்ளது. முதல் நாள் போட்டியில் குரோஷியாவை பிரேசில் வீழ்த்தியது. இரண்டாம் நாளான நேற்று மூன்று போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் கேமரூனை, மெக்சிகோ வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், நெதர்லாந்திடம் படுதோல்வியடைந்தது. மூன்றாவது பந்தையத்தில் குட்டி நாடு சிலி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

4 matches to be played at FIFA World Cup today

வார இறுதி நாள் என்பதால் ரசிகர்கள் அதிக அளவுக்கு இன்று போட்டிகளை பார்க்க குவிவார்கள். அவர்களின் ரசனைக்கு தீனிபோடும்வகையில் இன்று நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன. கொலம்பியாவுக்கும், கிரீசுக்கும் நடுவே இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு முதல் போட்டியும், இரவு 12.30 மணிக்கு உருகுவே, கோஸ்டரிகா அணிகளுக்கு இடையே 2வது போட்டியும், அதிகாலை 3.30 மணிக்கு நடைபெறும் 3வது போட்டியில் இங்கிலாந்தும், இத்தாலியும், காலை 6.30 மணிக்கு நடைபெறும் 4வது போட்டியில் ஐவரி கோஸ்ட் மற்றும் ஜப்பான் அணிகளும் மோதுகின்றன.

Story first published: Saturday, June 14, 2014, 17:51 [IST]
Other articles published on Jun 14, 2014
English summary
4 matches to be played at FIFA World Cup today including big match between England and Italy.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+