Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

21 வருடங்களுக்கு பிறகு சாதனை.. டாப் 100 இடத்தில் இடம்பிடித்த இந்திய கால்பந்தாட்ட அணி

கொல்கத்தா: இந்திய கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக தேசிய அணி, உலக கால்பந்து நாடுகள் தர வரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்து சாதித்துள்ளது.

ஃபிபா அமைப்புதான் கால்பந்து அணிகளுக்கான தர புள்ளிகளை வழங்குகிறது. இன்று வெளியிட்டுள்ள புதிய புள்ளி பட்டியலில், இந்திய கால்பந்தாட்ட அணி, 100வது இடத்தை பிடித்துள்ளது. நிகாரகுவா, லிதுவானியா மற்றும் எஸ்டோனியா அணிகளும், 100வது இடத்தில் உள்ளன.

A first in 21 years: India break into top 100 of FIFA Rankings

இந்திய கால்பந்தாட்ட அணியின் உதயத்திற்கு பிறகு, 21 வருடங்களில் இப்போதுதான் முதல் முறையாக முதல் நூறு இடங்களுக்குள் இந்திய தேசிய அணி வந்துள்ளது.

1996ம் ஆண்டு இந்தியா ஃபிபா புள்ளி அடிப்படையில், 94வது இடத்தை பிடித்தது. அதுதான், இதுவரை சாதனையாக தொடர்கிறது. இந்திய கால்பந்தாட்ட அணிக்கு தற்போது, ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 4, 2017, 18:29 [IST]
Other articles published on May 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+