கால்பந்து வீரர் நெய்மர் மீது பாலியல் வன்புணர்வு புகார்.. பெண் திடுக்கிடும் வழக்கு..கைதாகிறார்?
பாரிஸ்: பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர் பாலியல் புகாரில் சிக்கி இருக்கிறார். பெண் ஒருவர் நெய்மர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக நெய்மருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதனால் இவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
பிரேசில் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடும் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவரை குறித்து நிறைய சர்ச்சைகள் வலம் வருவது வழக்கம்.
சர்ச்சைகளுக்கு ஏற்றபடியே இவரும் நிறைய ஒழுக்கமில்லாத விஷயங்கள் செய்து இருக்கிறார். இந்த நிலையில் தான் தற்போது பாலியல் புகாரில் சிக்கி இருக்கிறார்.

யார் இவர்
நெய்மர் அல்லது நெய்மர் ஜூனியர் என்று அழைக்கப்படும் நெய்மர் டா சல்வா சான்டோஸ் ஜூனியர் உலகம் முழுக்க பிரபலமான வீரர். உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் இவரும் ஒருவர். ஆனால் கடந்த சில வருடங்களாக இவருக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூறவேண்டும்.

நிறைய பேர்
கடந்த சில வருடங்களாக இவர் மீது நிறைய புகார்கள் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதில் நிறைய இவரது ஒழுக்கம் சரியில்லை, பொதுவில் தவறாக நடந்து கொள்கிறார், பெண்களிடம் மோசமாக நடந்து கொள்கிறார், குடித்துவிட்டு பிரச்சனை செய்கிறார் போன்ற புகார்கள்தான் அதிகம்.

என்ன நடவடிக்கை
இதனால் சில நாட்களுக்கு முன் இவர் மீது அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இவரை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அணி நிர்வாகம் நீக்கியதும் குறிப்பிடத்தக்கது . அதே போல கடந்த சில மாதங்களாக இவரது ஆட்டமும் அத்தனை சிறப்பானதாக இல்லை.

என்ன புகார்
இந்த நிலையில்தான் தற்போது நெய்மர் பாலியல் புகாரில் சிக்கி இருக்கிறார். பெண் ஒருவர் நெய்மர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். நெய்மர் தன்னை பிரான்சில் ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து மது கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

எப்படி செய்தார்
இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது நெய்மர் மீது அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. இவரை அணியில் இருந்து தற்காலிகமாக நீக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மறுப்பு
ஆனால் இந்த செய்தியை நெய்மர் மறுத்துள்ளார். இது அடிப்படை ஆதாரமற்ற புகார் என்று நெய்மர் கூறியுள்ளார். தன் மீது சிலருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications