Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"என்னா த்ரில்லர்டா சாமி" கடைசி நிமிடத்தில் மீண்டெழுந்த ஈரான்.. வேல்ஸ் அணிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தோஹா: வேல்ஸ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணி த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் குரூப் பி பிரிவில் உள்ள ஈரான் - வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஈரான் அணி 6-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

அதேபோல் அமெரிக்கா அணிக்கு எதிராக வேல்ஸ் அணி மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதனால் உலகக்கோப்பைத் தொடரில் யார் முதல் வெற்றியை பதிவு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கோல் அடித்த ஈரான்

கோல் அடித்த ஈரான்

இதனிடையே கடந்த போட்டியில் ஈரான் அணி வீரர்கள் தேசிய கீதம் பாடுவதை தவிர்த்த நிலையில், இந்தப் போட்டியில் தேசிய கீதம் பாடினர். இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பரபரப்புடன் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 15வது நிமிடத்திலேயே ஈரான் அணியின் அலி கோல் ஒன்றை அடித்தார். ஆனால் அது வி.ஏ.ஆர். தொழிற்நுட்பத்தால் ஆஃப் சைடு கொடுக்கப்பட்டது. இதனால் கோல் திரும்பப் பெறப்பட்டது.

முதல் பாதி முடிவு

முதல் பாதி முடிவு

இதன்பின்னர் இரு அணிகளுக்கு அடுத்தடுத்து கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் அது அந்தந்த அணிகளின் டிஃபெண்டர்களால் தடுக்கப்பட்டது. தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுக்க முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என்ற நிலையில் முடிவுக்கு வந்தது.

முதல் ரெட் கார்ட்

முதல் ரெட் கார்ட்

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. பின்னர் ஈரான் அணியில் மாற்ற வீரர்கள் களமிறங்கினர். அதேபோல் வேல்ஸ் அணியிலும் ஜோ ஆலனுக்கு பதிலாக ஈத்தன் களமிறக்கப்பட்டார். இதனால் ஆட்டம் பரபரப்பாகியது. இந்த நிலையில் 84வது நிமிடத்தின் போது வேல்ஸ் அணியின் கோல்கீப்பரின் செயல், ஈரான் அணியின் டரேமிக்கு காயத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வேல்ஸ் கோல்கீப்பர் ஹென்னஸிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

கடைசி நிமிட அதிர்ச்சி

கடைசி நிமிட அதிர்ச்சி

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டமும் முடிவுக்கு வந்த நிலையில், கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆக்ரோஷமாக ஆடிய ஈரான் அணிக்கு கூடுதல் நேரத்தின் 8வது நிமிடத்தில் கோல் கிடைத்தது. அந்த அணியின் செஷ்மி சிறப்பாக முதல் கோலை அடித்து அசத்தினார். தொடர்ந்து அடுத்த இரண்டு நிமிடங்களில் ஈரான் அணி ரமின் அடுத்த கோல் அடிக்க, 2-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணி அபார வெற்றியை பதிவு செய்தது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் அணி பெறும் இரண்டாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தகக்து.

Story first published: Friday, November 25, 2022, 18:09 [IST]
Other articles published on Nov 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+