அரைகுறை ஆடையுடன் மைதானத்திற்குள் ஓடி வந்த பெண்.. கஷ்டப்பட்டு தடுத்த காவலர்கள்.. வைரல் வீடியோ!
மேட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் மைதானத்திற்குள் ஓடி வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது.
நேற்று ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில் புகழ்பெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி உலகம் முழுக்க பல கோடி மக்கள் பார்க்கக் கூடிய விளையாட்டு ஆகும். கிரிக்கெட் போட்டிகளை விட இதற்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டியில் டொட்டேன்ஹெம் ஹாட்ஸ்பர் அணி மற்றும் லிவர்புல் அணிகள் மோதியது.

தோல்வி அடைந்தது
இந்த போட்டியில் டொட்டேன்ஹெம் ஹாட்ஸ்பர் அணி வெற்றிபெறும் என்று எல்லோரும் கணித்து இருந்தனர். இதற்காக அந்த அணியின் ரசிகர்கள் மேடையில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால் எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்து லிவர்புல் அணி நேற்று வென்றது. 2-0 என்று கோல் கணக்கில் அந்த அணி நேற்று வென்றது.

என்ன நடந்தது
இந்த போட்டி நேற்று நடந்து கொண்டு இருக்கும் போதே பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் மைதானத்திற்குள் நுழைந்தார். மிக மிக மோசமான ஆடையை அவர் அணிந்து இருந்தார். இதை பார்த்ததும் ரசிகர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

போட்டி நிறுத்தம்
இவர் நேராக மைதானத்திற்குள் நடுவில் வந்து நின்றார். பாதுகாவலர்கள் எல்லோரையும் தாண்டி திறமையாக மைதானத்திற்குள் நின்றார். அவர் போட்டு இருந்த அரைகுறை ஆடையுடன் நடனம் ஆட முயற்சி செய்தார். இதனால் போட்டி சிறிது நேரம் தடை பட்டது. ஆனால் அதற்குள் காவலர்கள் வந்து அவரை தூக்கி சென்றனர்.

ஏன் இப்படி
மைதானத்திற்குள் ஓடி வந்த அந்த பெண்ணின் பெயர் கின்ஸி வோலேன்ஸ்கி ஆகும். இவர் ரஷ்யாவை சேர்ந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அந்த பெண் இன்ஸ்ட்டா கிராமில் விளக்கம் அளித்துள்ளார். வாழ்க்கை அப்படியே சாதாரணமாக சென்றால் கிக் கிடையாது. அதனால்தான் இப்படி ஒரு த்ரில்லுக்காக ஓடி வந்தேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் வழக்கு
இவர் மீது தற்போது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இந்த பெண்ணின் காதலர் விட்டலி ஸ்ட்ரோவெஸ்கி நடத்தும் விட்டலி அன்சென்சார்ட் என்ற இணைய பக்கத்தை விளம்பரம் செய்வதற்காக அந்த பெண் இப்படி ஓடினார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விட்டலி ஸ்ட்ரோவெஸ்கி ஏற்கனவே கால்பந்து உலகக் கோப்பையில் இப்படி ஓடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரல் வீடியோ
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications