For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஆசிய கோப்பை கால்பந்தில் இந்திய அணியை வீழ்த்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி அபார வெற்றி!!

அபுதாபி : அபுதாபியில் நடைபெற்ற ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் 2 - 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

ஏஎஃப்சி ஆசியா கோப்பை 2019 கால்பந்து போட்டி அபு தாபியில் உள்ள ஸயாத் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் மோதின.

AFC Asian cup 2019 : India lost to UAE - full match report

ஆட்டத்தின் தொடக்கமே த்ரில்லாக இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் தடுப்பாட்டத்தையே ஆடினர். ஆட்டத்தின் 7 ஆவது நிமிடத்தில் இந்திய அணி வீரர் உதாந்தா ஒரு கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அது நழுவிப்போனது.

ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் சுனில் ஷட்டரியும், அனிருத் தப்பாவும் பந்தை கோல் போஸ்ட்டை நோக்கி கொண்டு சென்றனர். ஆனால் இந்த முறையும் கோல் அடிக்கவில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் மிக நன்றாக விளையாடினர். இதையடுத்து ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கல்பாஃன் முபாரக் அல் ஷாம்ஷி அற்புதமாக ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதையடுத்து 2 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த இரண்டு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 46 ஆவது நிமிடத்தில் ஹாலிச்சரன் வெளியேற்றப்பட்டு ஜெஜே களமிறக்கப்பட்டார். அடுத்து 52 ஆவது நிமிடத்தில் ஆஷிஷ் குருணியனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 63 ஆவது நிமிடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் அனிருத் தப்பா வெளியேற்றப்பட்டு ரௌலின் களம் இறக்கப்பட்டார்.

பின்னர் ஆட்டத்தில் 76 ஆவது நிமிடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிலும் 79 நிமிடத்தில் இந்திய அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 88 நிமிடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் அலி முபாகட் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து கூடுதலாக 2 நிமிடங்கள் தரப்பட்டது. அந்த இரண்டு நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Friday, January 11, 2019, 11:12 [IST]
Other articles published on Jan 11, 2019
English summary
AFC Asian cup 2019 : India lost to UAE - full match report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+