For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய கோப்பை கால்பந்து- ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வியை தழுவிய இந்தியா

கத்தார் : ஆசிய கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆன கத்தார் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா உஸ்பெகிஸ்தான் சிரியா ஆகிய அணிகளுடன் இந்தியா களமிறங்கியது.

இதில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடுமையாக மோதி கொண்டனர்ம் இதில் இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தார்கள்.

AFC Asian cup Football - Australia thrash india by 2-0 in opening game of group b

ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் இந்திய வீரர் சுரேஷின் தமக்கு கிடைத்த பிரீ கீக் வாய்ப்பை கோலாக மாற்ற தவறினார். இதேபோன்று ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த பிரீ கீக் வாய்ப்பு வீணானது. இதைப் போன்று போட்டியின் 34-வது நிமிடத்தில் இந்திய வீரர் குருபித் சிங் அடித்த கோலும் தவறியது.

இந்த நிலையில் ஆட்டத்தின் முதல் பகுதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதை அடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஜாக்சன் இர்வின் போட்டியின் 50-வது நிமிடத்தில் அபாரமாக கோலடித்து ஆஸ்திரேலியாவின் கணக்கை தொடங்கினார்.

இதேபோன்று போட்டியின் 73 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஜார்டன்பாஸ் அபாரமாக கோல் அடித்து ஸ்கோரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் உயர்த்தினார். இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதை அடுத்து இந்திய வீரர்கள் கடுமையாக போராடியும் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்ற பிறகும் இந்திய வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த குரூப்பில் இந்தியா உஸ்பேகிஸ்தான் மற்றும் சிரியா என தங்களை விட தர வரிசையில் முன்னிலையில் உள்ள அணியை தான் இந்தியா எதிர்கொள்ளப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 13, 2024, 19:45 [IST]
Other articles published on Jan 13, 2024
English summary
AFC Asian cup Football - Australia thrash india by 2-0 in opening game of group b ஆசிய கோப்பை கால்பந்து- ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வியை தழுவிய இந்தியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+