For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசாத்தியமான வீரர் லயோனல் மெஸ்ஸி.. உலகக்கோப்பையை வெல்லபோகும் அணி இதுதான்.. நட்சத்திர வீரர் கணிப்பு!

தோஹா: 1986ம் ஆண்டுக்கு பின் அர்ஜென்டினா அணி மீண்டும் உலகக்கோப்பை வென்று சாதிக்கும் என்றும், நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது கனவை எட்டிப்பிடிப்பார் என்றும் இப்ராகிமோவிச் தெரிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்று போட்டி இன்று தொடங்குகிறது. முதல் அரையிறுதி போட்டியில் வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து குரோஷியா மோத உள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அர்ஜென்டினா ஜாம்பவான் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என்பதால், ஏராளமான ரசிகர்கள் அர்ஜென்டினாவுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

மெஸ்ஸிக்கு தான் கோப்பை

மெஸ்ஸிக்கு தான் கோப்பை

இந்த நிலையில் உலகக்கோப்பை கனவை லயோனல் மெஸ்ஸி நிச்சயம் எட்டிப்பிடிப்பார் என்று ஸ்வீடன் கால்பந்து வீரர் இப்ராகிமோவிச் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து இப்ராகிமோவிச் கூறுகையில், உலகக்கோப்பையை யார் வெல்ல போகிறார்கள் என்பது ஏற்கனவே தெரிந்துவிட்டது. நிச்சயம் மெஸ்ஸி கோப்பையை கைப்பற்றுவார்.

தவிர்க்க முடியாத வீரர்

தவிர்க்க முடியாத வீரர்

அதேபோல் 2018ம் ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடிய குரோஷியா - பிரான்ஸ் அணிகள் மீண்டும் இறுதிப்போட்டியில் விளையாட மாட்டார்கள். மொராக்கோ அணி பிரான்ஸ் அணியை வீழ்த்த அதிக வாய்ப்புகள் உள்ளது. பிரான்ஸ், குரோஷியா ஆகிய அணிகள் வலிமையானவை என்றாலும், மெஸ்ஸி தவிர்க்க முடியாத வீரர்.

மொராக்கோவின் வலிமை

மொராக்கோவின் வலிமை

அதேபோல் மெரோக்கோ அணி அரையிறுதிக்கு முன்னேறியது மற்ற அணிகளுக்கும், நாடுகளுக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் மொராக்கோ வீரர்கள் திறமையானவர்கள். இதுபோன்ற அதிர்ச்சிகள் உலகக்கோப்பை ரசிகர்களுக்கு அதிக விருப்பமாக இருக்கும். உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாகவே மொராக்கோ வலிமையாக இருந்தது என்று தெரிவித்தார்.

ரொனால்டோ பற்றி கருத்து

ரொனால்டோ பற்றி கருத்து

தொடர்ந்து ரொனால்டோ உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது குறித்த கேள்விக்கு, ரொனால்டோ உலகக்கோப்பையை வெல்லவில்லை என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. ஏனென்றால் அனைத்து வீரர்களாலும் உலகக்கோப்பையை வெல்ல முடிந்ததில்லை. ஆனால் அனைவருமே முயற்சித்துள்ளார்கள். அந்த முயற்சிக்கு பலன் கிடைக்காத போது, அனைவருக்கும் கண்ணீர் வரும். அதுபோல் தான் ரொனால்டோ உணர்வை வெளிக்காட்டியுள்ளார் என்று தெரிவித்தார்.

Story first published: Tuesday, December 13, 2022, 14:54 [IST]
Other articles published on Dec 13, 2022
English summary
Zlatan Ibrahimovic said that Argentina will win the World Cup again after 1986 and star player Messi will achieve his dream.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+