Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெஸ்ஸி என்னும் மெஜிசியன்.. 36 போட்டிகளில் தொடர் வெற்றி.. ஆடுகளத்தில் ஆர்ப்பரிக்குமா அர்ஜென்டினா?

தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 5வது முறையாக களமிறங்கும் லயோனல் மெஸ்ஸி, இம்முறை அர்ஜென்டினா அணிக்காக கோப்பையை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் கடந்த கால சாதனைகளையும், வீழ்ச்சிகளையும் காணலாம்.

கால்பந்து விளையாட்டில் பீலே, மரடோனா, குரைஃப், ரொனால்டினோ, டேவிட் பெக்காம் என எத்தனையோ ஜாம்பவான்களின் ஆட்டத்தை பார்த்திருப்போம், பார்த்துக் கொண்டிருக்கிறோம், இனியும் பார்க்க போகிறோம்.

ஆனால் லயோனல் மெஸ்ஸி போன்ற மெஜிசியனை மீண்டும் கால்பந்து வரலாற்றில் பார்ப்போமா என்பது சந்தேகம் தான். மெஸ்ஸியை பற்றி தெரிந்திடாத விளையாட்டு ரசிகர்களே இருக்க மாட்டார்கள். ஏன் கால்பந்து பற்றி தெரியாதவர்கள் கூட மெஸ்ஸியை பற்றி அறிந்து வைத்திருப்பார்கள்.

ஏன் மெஸ்ஸி ஸ்பெஷல்?

ஏன் மெஸ்ஸி ஸ்பெஷல்?

களத்தில் பந்து இவரது காலுக்கு வந்தால் போதும், ஏராளமான எதிரணி வீரர்கள் இவரை சூழ்ந்துகொண்டிருப்பார்கள். மெஸ்ஸியை டிஃபெண்ட் செய்ய வேண்டுமானால் ஒவ்வொரு வீரரும் கடவுளிடம் வேண்ட வேண்டிய நிலைதான் உருவாகும். இதனை நான் சொல்லவில்லை. இத்தாலி நாட்டின் கால்பந்து வீரர் செல்லினி கூறியது. மெஸ்ஸியை தடுக்க முயன்ற எதிரணி டிஃபெண்டர்கள் களத்தில் முட்டி மோதிக்கொள்ளும் காட்சிகள் அதிகமாக நடக்கும்.

மெஸ்ஸியின் மேஜிக்

மெஸ்ஸியின் மேஜிக்

இடதுகால் வீரரான மெஸ்ஸியை, களத்தில் எத்தனை வீரர்கள் தடுக்க முயன்றாலும், அவர்களை ட்ரிபில் செய்து கோல் அடிப்பது அவரது காலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அப்படிப்பட்ட பெரும் திறமை கொண்ட மெஸ்ஸி, உலகக்கோப்பையை அர்ஜென்டினா அணிக்காக வெல்ல வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

மெஸ்ஸியின் சாதனை

மெஸ்ஸியின் சாதனை

சிறுவயதில் இருந்து தான் ஆடி வந்த பார்சிலோனா அணிக்காக அவர் செய்யாத சாதனைகள் இல்லை, வாங்காத கோப்பைகள் இல்லை. ஆனால் சொந்த நாட்டின் அணியான அர்ஜென்டினாவுக்கு களமிறங்கும் போது மட்டும் ஏதோவொரு சிக்கல்கள் வந்துகொண்டே இருந்தது. நீண்ட காத்திருப்புக்கும், உழைப்பிற்கும் பிறகே 2021ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றது. அப்போது அவரும், அவர் அணியினரும் வெளிப்படுத்திய கொண்டாட்டத்திலேயே தெரிந்திருக்கும்.

ரசிகர்கள் நம்பிக்கை

ரசிகர்கள் நம்பிக்கை

அர்ஜென்டினா அணிக்காக கோப்பை வெல்ல வேண்டும் மெஸ்ஸியின் ஆசை கொஞ்சம் நிறைவேறியது. அந்த கோப்பையை வென்றதன் மூலம் ராசியில்லாத வீரர் என்ற பெயரை மெஸ்ஸி துடைத்தெறிந்தார். அதுமட்டுமல்லாமல் 2022ம் ஆண்டு உலகக்கோப்பையையும் மெஸ்ஸி வெல்வார் என்ற நம்பிக்கையையும் அன்றே ஏற்படுத்திவிட்டார்.

மெஸ்ஸியின் ஓய்வு

மெஸ்ஸியின் ஓய்வு

5வது முறையாக உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்கும் மெஸ்ஸி, இதுவரை அதிகபட்சமாக அர்ஜென்டினா அணியை 2014ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். 2015,2016 கோபா அமெரிக்கா கோப்பை இறுதி போட்டிகளில் தோல்வி அடைந்த பின், கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டு, ஓய்வை அறிவித்தார்.

 கோபா அமெரிக்கா கோப்பை

கோபா அமெரிக்கா கோப்பை

அதன் பின் மெஸ்ஸி ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அர்ஜென்டினா அணிக்கு வந்த மெஸ்ஸிக்கு 2018 உலக கோப்பையும், 2019 கோபா அமெரிக்காவும் கை கொடுக்கவில்லை. இறுதியாக 2021 கோபா அமெரிக்கா கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர் மல்க அர்ஜென்டினா அணிக்கு வென்று கொடுத்தார். அவர் அழுததை கண்டு, உலகமே உணர்ச்சி வசப்பட்டது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

உலகத்தரம் வாய்ந்த கிளப்களில் ஆடிவரும் வீரர்கள் அர்ஜென்டினா அணியில் இருப்பதால், இம்முறை உலகக்கோப்பை மெஸ்ஸி வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பைத் தொடருக்கு முன் 36 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்திருக்கும் அர்ஜென்டினா, உலகக்கோப்பைத் தொடரில் வெற்றி நடையை தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Saturday, November 19, 2022, 6:00 [IST]
Other articles published on Nov 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+