செர்பியா முன்னிலை
இந்த நிலையில் முதல் பாதி ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் பலனாக ஸ்விட்சர்லாந்து அணியின் ஷகிரி 20வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். ஆனால் ஸ்விட்சர்லாந்து அணியின் முன்னிலையை அடுத்த 6வது நிமிடத்தில் செர்பியா அணி சமன் செய்தது. அந்த அணியின் மிட்ரோவிக் 26வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார்.
ஸ்விட்சர்லாந்து பதிலடி
இதன் மூலம் ஆட்டம் 1-1 என்ற நிலையில், பரபரப்பாக இருந்தது. இதனைத் தொடர்ந்து 35வது நிமிடத்தில் செர்பிய அணியின் விளாஹோவிக் இரண்டாவது கோலை அடித்து அசத்த, அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடியாக முதல் பாதியின் 44வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து அணியின் எம்போலோ இரண்டாவது கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் 2-2 என்ற கோல் உடன் முடிவுக்கு வந்தது.
ஆரம்பே அசத்தல்
தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டம் பரபரப்பாக தொடங்கியது. அந்த பரபரப்புடன் 48வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து அணி மூன்றாவது கோலை அடித்தது. அந்த அணியின் ரெமோ ஸ்விட்சர்லாந்து அணிக்காக மூன்றாவது கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க செர்பியா வீரர்கள் எடுத்த முயற்சிகள் ஸ்விட்சர்லாந்து அணி தடுப்பாட்ட வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஸ்விட்சர்லாந்து வெற்றி
இதே நிலை இரண்டாம் பாதியின் கடைசி நிமிடம் வரை தொடர, கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் ஸ்விட்சர்லாந்து அணி கோல் அடிக்க முயற்சித்த போது, திடீரென இரு அணி வீரர்களும் மோதி கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மேலும் எந்த கோல்களும் அடிக்கப்படாததால், ஸ்விட்சர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.
3வது முறை
இந்த வெற்றியின் மூலம் ஸ்விட்சர்லாந்து அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்விட்சர்லாந்து அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.