Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயிற்றில் 9 மாசம்... ஹெவி வெயிட் தூக்குகிறார்.. எட்டி உதைக்கிறார்.. மிரட்டும் அலெக்ஸ்

கலிபோர்னியா: அமெரிக்கா கால்பந்து வீராங்கனை அலெக்ஸ் மார்கன் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அப்படி இருக்கும் சமயத்திலும் கூட அவர் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் மார்கன் எனப்படும் அலெக்சாண்ட்ரா மார்கன். கால்பந்து வீராங்கனை. அமெரிக்க தேசிய கால்பந்து அணியிலும் இடம் பெற்றிருப்பவர். தேசிய அளவில் ஓர்லான்டோ பிரைட் அணியில் முக்கிய வீராங்கனையாகவும் இருப்பவர்.

அலெக்ஸ் இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். மேலும் இப்போது அமெரிக்காவில் கொரோனாவைரஸ் பரவல் வேறு உக்கிரமாக இருக்கிறது. இதனால் வெளியிலும் போக முடியாத நிலை. ஆனாலும் அலெக்ஸ் விடவில்லை. தனது வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சிகளைத் தொடர்கிறார்.

அனாயசமான உடற்பயிற்சி

அனாயசமான உடற்பயிற்சி

அதுவும் எப்படி கடினமான உடற்பயிற்சிகளை அனாயசமாக செய்கிறார். இதைப் பார்க்கும் நமக்கே திக்கென்று இருக்கிறது. காரணம் நம்ம ஊரில் எல்லாம் கர்ப்பமாகி விட்டாலே வெயிட் தூக்காதே அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று பயமுறுத்துபவர்கள்தான் அதிகம். ஆனால் அலெக்ஸ் செய்யும் வேலைகளைப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

வெயிட் தூக்குகிறார்

பெரிய பெரிய வெயிட்டைத் தூக்கி உடற்பயிற்சி செய்கிறார். தனது மேடிட்ட வயிறுக்கு பாதிப்பு வராத வகையில் சிட்டப் செய்கிறார். புல்லப் செய்கிறார். எல்லாமே தனித்து செய்கிறார். துணைக்கு யாரும் அருகில் இல்லை. இதையெல்லாம் அவர் செய்வதைப் பார்க்கும்போது நமக்கே பகீர் என்று இருக்கிறது. ஆனால் உடல் பலத்தை விட அவரிடம் மன பலம் அதிகமாகவே இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

நிறைமாத கர்ப்பம்

இன்னொரு வீடியோவில் அவர் தனது வயிற்றுச் சுமையை சுமந்தபடி கால்பந்தும் ஆடுகிறார். கிளாமர் என்ற மேகசின் தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில் ஏதோ மைதானத்தில் ஆடுவது போல படு கேஷுவலாக பந்தை உதைத்துத் தள்ளுகிறார் அழகாக. அலெக்ஸ் இன்னும் மன வலிமையுடன் இருப்பதையே இது காட்டுகிறது.

உடல் வலிமை

உடல் வலிமை

விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு நிச்சயம் உடல் வலிமையுடன் மன வலிமையும் அதிமாகவே இருக்கும். அதில் சந்தேகமே இல்லை. அதேசமயம், அலெக்ஸ் போன்றோரின் செயல்கள் நிச்சயம் கர்ப்பிணிகளுக்கு பெரும் தன்னம்பிக்கையே தரவே செய்யும். அந்த வகையில் அலெக்ஸ் மார்கனின் இந்த வீடியோக்கள் நிச்சயம் நல்ல மோட்டிவேஷனாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Story first published: Monday, April 13, 2020, 13:12 [IST]
Other articles published on Apr 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+