Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் ஐரோப்பாவின் ஆதிக்கம்.... அரை இறுதியில் நான்கு ஐரோப்பிய நாடுகள்!

மாஸ்கோ: கால்பந்து விளையாட்டில் உள்ள ஐரோப்பாவின் ஆதிக்கம் உலகக் கோப்பையிலும் பரவியுள்ளது. இந்த உலகக் கோப்பையின் அரை இறுதியில் விளையாடும் நான்கு அணிகளும் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. மேலும் தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பாவுக்கே உலகக் கோப்பை கிடைக்க உள்ளது.

ரஷ்யாவில் நடக்கும் 21-வது ஃபிபா உலகக் கோப்பை அரை இறுதியை எட்டியுள்ளது. கால் இறுதியில் விளையாடிய 8 அணிகளில் 6 அணிகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. தென் அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் உருகுவே, கால் இறுதியில் தோல்வியடைந்தன.

All europe semi finals in the fifa world cup

அதையடுத்து அரை இறுதியில் விளையாடும் நான்கு அணிகளும் ஐரோப்பிய நாடுகள் என்பது உறுதியாகிவிட்டது. 1982 மற்றும் 2006க்குப் பிறகு இந்த உலகக் கோப்பையில்தான் அரை இறுதியில் விளையாடும் நான்கு நாடுகளும் ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக உள்ளன.

மேலும் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்ல உள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன.

மிகவும் வலுவான, பணக்கார கிளப் அணிகள் ஐரோப்பாவிலேயே அதிகம் உள்ளன. அதிலும் பிக் ஃபைப் என்றழைக்கப்படும் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவையே அதிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

1982ல் இருந்து உலகக் கோப்பையில் அரை இறுதிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 40 அணிகள் அரை இறுதியில் விளையாடியுள்ளன. அதில் 31 ஐரோப்பிய நாடுகள். தென் அமெரிக்காவைச் சேர்ந்த 8 மற்றும் 2002ல் ஆசியாவைச் சேர்ந்த தென்கொரியா ஆகியவை அரை இறுதியில் விளையாடியுள்ளன.

Story first published: Saturday, July 7, 2018, 23:09 [IST]
Other articles published on Jul 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+