Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜெண்டினா-நைஜீரியா இன்று மோதல்: தொடருமா மெஸ்சி மேஜிக்?

ரியோடி ஜெனிரோ: இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் அர்ஜெண்டினா மற்றும் நைஜீரிய அணிகளுக்கு நடுவேயான போட்டிதான் இன்று, விஐபி அந்தஸ்து பெற்றுள்ள போட்டியாகும். அர்ஜெண்டினாவின் மெஸ்சி இதிலும் தனது மேஜிக்கை காண்பிப்பாரா என ரசிகர்கள் டிவிமீது விழிவைத்து காத்துள்ளனர்.

நான்கு போட்டிகள்

நான்கு போட்டிகள்

பிரேசிலில் நடைபெற்றுவரும் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு குரூப் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினாவும், நைஜீரியாவும் போர்டோ அல்கிரே மைதானத்தில், பலப்பரிட்சை நடத்த உள்ளன. அதே நேரத்தில் மற்றொரு மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இதே குரூப்பை சேர்ந்த போஸ்னியா மற்றும் ஈரான் அணிகள் மோதுகின்றன.

நள்ளிரவில் இரண்டு

நள்ளிரவில் இரண்டு

நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், குரூப் இ பிரிவில் இடம் பெற்றுள்ளன ஹோண்டுரஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில், மற்றொரு மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இதே குரூப்பில் இடம்பெற்றுள்ள ஈக்வெடார் மற்றும் பிரான்சு அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்த நான்கு போட்டிகளில், ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது நைஜீரியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் நடுவேயான போட்டியைத்தான். இதற்கு காரணம் அர்ஜெண்டினாவும், நைஜீரியாவும் மிகவும் பலம் வாய்ந்த அணிகள் என்பதுதான். போட்டி நடைபெறும் போர்டோ அல்கிரே மைதானம், அர்ஜெண்டினா நாட்டின் எல்லையில் இருப்பதால் வேன்களிலும், பஸ்களிலும் அந்த நாட்டு ரசிகர்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.

இந்திய ரசிகர்களுக்கு வசதி

இந்திய ரசிகர்களுக்கு வசதி

பிரேசிலுக்கு இணையாக அர்ஜெண்டினா உலக கால்பந்தாட்ட அரங்கில் மதிக்கப்படுகிறது. நைஜீரியாவோ ஆப்பிரிக்க கண்டத்திலேயே நம்பர்-1 அணியாக விளங்கிவருகிறது. எனவே இரு அணிகள் மோதும் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய ரசிகர்கள் தூக்கத்தை கெடுக்காமல் கண்டு ரசிக்கும் வகையில் போட்டி இரவு 9.30 மணிக்கு துவங்குகிறது.

தடுமாறும் அர்ஜெண்டினா

தடுமாறும் அர்ஜெண்டினா

அர்ஜெண்டினா இதுவரை தனது முழு பலத்தை காண்பித்து ஆதிக்கம் செய்யவில்லை. ஆனால் மெஸ்சி மட்டும் தனது அணியை இக்கட்டில் இருந்து காக்கும் கோல்களை போட்டு அசத்தியுள்ளார். ஈரான், போஸ்னியா அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளில் அர்ஜெண்டினா அணி வெற்றி வாகை சூடியது. ஆனாலும் தாக்குதல் ஆட்டத்தில் வலுவான அர்ஜெண்டினாவோ, இரு அணிகளுக்கு எதிராகவும் 3 கோல்கள் மட்டுமே போட முடிந்தது. ஈரானுக்கு எதிராக இறுதிகட்ட நேரத்தில் மெஸ்சி கோல்போடாவிட்டால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.

மெஸ்சி நட்சத்திரம்

மெஸ்சி நட்சத்திரம்

அர்ஜெண்டினாவின் பலமே அதன் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்சிதான். உலக கோப்பையில் அர்ஜெண்டினா போட்ட 3 கோல்களில், 2 கோல்கள் மெஸ்சியால்தான் அடிக்கப்பட்டது. பிற வீரர்கள் ஒத்துழைப்பு மெஸ்சிக்கு இன்னும் கிடைக்கவில்லை. அர்ஜெண்டினா அணி பங்கேற்ற கடைசி 7 போட்டிகளில், மெஸ்சி மட்டும், 8 கோல் அடித்துள்ளார்.

வியூகத்தை மாற்ற திட்டம்..?

வியூகத்தை மாற்ற திட்டம்..?

எனவே, நைஜீரியாவுக்கு எதிரான போட்டியிலும் மெஸ்சி மேஜிக்கைத்தான் அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். மெஸ்சியை மட்டுமே எதிர்பார்த்திருந்தால் அணி தொடர்ந்து வெற்றி பெறுவது கஷ்டம் என்பதால் அணியின் வியூகத்தை மாற்றியமைக்க பயிற்சியாளர் செபல்லா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நைஜீரியாவும் வீக்தான்

நைஜீரியாவும் வீக்தான்

நைஜீரிய அணியை பொறுத்தவரையில் ஈரானுக்கு எதிராக டிரா செய்து, போஸ்னியாவை வென்று, ஆக மொத்தம், 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த இரு போட்டிகளிலும் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது. தவிர, இந்த அணி கடைசியாக பங்கேற்ற 10 உலக கோப்பை போட்டிகளில் ஒன்றில் மட்டும் தான் வென்றது. ஆறு போட்டிகளில் நைஜீரியாவுக்கு தோல்விதான் கிடைத்தது. 3 போட்டிகள் டிரா ஆகின.

உலக கோப்பையில் கிங்

உலக கோப்பையில் கிங்

அர்ஜெண்டினா அணி பங்கேற்ற கடைசி 14 உலக கோப்பை போட்டிகளில் 11ல் வென்றது. ஒரு போட்டியில் மட்டும் தோற்றது. 2 போட்டியை டிரா செய்தது. இதில் 27 கோல் அடித்த இந்த அணி, எதிரணிகளை 5 கோல்கள் மட்டும் அடிக்க அனுமதித்தது. அர்ஜெண்டினா, நைஜீரிய அணிகள் உலக கோப்பை தொடரில், இதுவரை மூன்று போட்டிகளில் மோதியுள்ளன. இந்த மூன்றிலும் அர்ஜெண்டினா வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Story first published: Wednesday, June 25, 2014, 13:40 [IST]
Other articles published on Jun 25, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+