Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கோல் மழைக்காலம்" முடிந்தது.. பிரேசில் உலகக் கோப்பை ஒரு 'ரீவைண்ட் விசிட்'!

ரியோ டி ஜெனிரோ: விறுவிறுப்புடன் தொடங்கி, பரபரப்புடன் நகர்ந்து பெரும் பரபரப்புடன் முடிந்து போயுள்ளது பிரேசிலில் நடந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடர்.

இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக கைப்பற்றியுள்ளது ஜெர்மனி அணி. அர்ஜென்டினா அணி ஏமாந்து போய் நாடு திரும்புகிறது.

பெரும் விறுவிறுப்புடன் கோலாகலமாக நடந்த இந்த உலகக் கோப்பைத் தொடரில் நடந்த பல சுவாரஸ்யங்களின் புள்ளி விவரத் தொகுப்பு:

இறுதிப் போட்டியில் மெஸ்ஸி மற்றும் ஜெர்மனி வீரர் குளோஸ் மூலம் கோல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெர்மனி ஒரே ஒரு கோலை மட்டுமே போட்டு ஆட்டத்தை முடித்தது. போட்டி 1-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது.

போட்டியின் 113வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மரியோ கோட்சே கோல் போட்டு ஜெர்மனி அணியின் 24 வருட பட்டக் காத்திருப்பை முடித்து வைத்தார்.

0...

0...

ஒரு போட்டியிலும் இந்தத் தொடரில் ஜெர்மனி தோற்கவே இல்லை. குரூப் போட்டியில் ஒரு டிராவை மட்டுமே அது சந்தித்தது. 6 போட்டிகளில் வென்றது.

1...

1...

இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது ஜெர்மனி. இந்தத் தொடரின் நம்பர் ஒன் அணியாகவும் அது முதலிடத்தைப் பிடித்தது.

4...

4...

ஜெர்மனிக்கு கிடைத்துள்ள 4வது உலகக் கோப்பையாகும் இது. இதற்கு முன்பு 1954, 74, 90 ஆகிய ஆண்டுகளில் அது பட்டம் வென்றிருந்தது.

6...

6...

கொலம்பியா வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் போட்ட கோல்கள் 6. இதுதான் இந்தத் தொடரில் ஒரு வீரர் அதிகம் போட்ட கோல்களாகும். இவருக்கே தங்கக் காலணி விருதும் கிடைத்தது.

7...

7...

ஜெர்மனியுடன் நடந்த அரை இறுதிப் போட்டியில் பிரேசில் அணி விட்டுக் கொடுத்த கோல்கள் 7.

10...

10...

பிரேசில் தொடரில் மொத்தம் 10 முறை ரெட் கார்டு காட்டப்பட்டது.

16...

16...

ஜெர்மனி வீரர் மிரஸ்லோவ் குளோஸ் இந்தத் தொடரில் தனது 16வது கோலைப் போட்டு புதிய உலக சாதனை படைத்தார். கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக கோல்கள் அடித்த வீரர் குளோஸ்தான்.

18...

18...

ஜெர்மனி அணி இந்தத் தொடரில் போட்ட மொத்த கோல்கள் எண்ணிக்கை 18 ஆகும். இந்தத் தொடரில் ஒரு அணி அதிகபட்சம் அடித்த கோல்கள் இவைதான். இதில் 15 கோல்களை வழக்கமான நேரத்தில் அது போட்டது. மற்ற 3 கோல்கள் கூடுதல் நேரங்கள் மூலம் வந்தவையாகும்.

22...

22...

ஜெர்மனிக்குக் கோப்பையை பெற்றுத் தர காரணமான கோலை அடித்த ஜெர்மனி வீரர் மரியோ கோட்சேவின் வயது 22.

24...

24...

24 வருடங்களுக்குப் பிறகு ஜெர்மனி தனது 4வது உலகக் கோப்பையைப் பெற்றுள்ளது. 1990ல் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது இதே அர்ஜ ன்டினாவை 1-0 என்ற இதே கோல் கணக்கில்தான் ஜெர்மனி வென்று தனது 3வது கோப்பையைப் பெற்றது நினைவிருக்கலாம்.

25...

25...

ஜெர்மனி கோல்கீப்பர் மனுவல் நியூயர் மொத்தம் 25 கோல் தடுப்புகளை இந்தத் தொடரில் நிகழ்த்தியிருந்தார். இது ஒரு சாதனையாகும். இவருக்கு தங்கக் கையுறை விருது கிடைத்தது.

35...

35...

உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனிக்குக் கிடைத்துள்ள பரிசுத் தொகை 35 மில்லியன் டாலராகும்.

64...

64...

மொத்தம் 64 போட்டிகள் இந்தத் தொடரில் இடம் பெற்றன.

83.9...

83.9...

ஜெர்மனியின் தாமஸ் முல்லர் இந்தத் தொரில் மொத்தம் 83.9 கிலோமீட்டர் தூரத்திற்குச் சமமான அளவிலான தொலைவை ஓடியிருந்தார். இந்தத் தொடரில் அதிக தூரம் ஓடியவர் இவர்தான்.

113...

113...

இறுதிப் போட்டியில் வெற்றிக்கான கோல் வந்த நேரம் 113வது நிமிடமாகும்.

171...

171...

இந்தத் தொடரில் மொத்தம் போடப்பட்ட கோல்கள் 171 ஆகும்.

396...

396...

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியின் சராசரி பாஸ் அதாவது பந்தைக் கடத்துதல் 396 ஆகும். இது 2010 தொடரில் 353 ஆக இருந்தது.

562...

562...

ஜெர்மனி கேப்டன் பிலிப் லஹம், மொத்தம் 562 பாஸ்களை உலகக் கோப்பைத் தொடரில் நிறைவு செய்துள்ளார்.

576...

576...

இந்தத் தொடரின் மொத்தப் பரிசுத் தொகை 576 மில்லியன் டாலராகும்.

736...

736...

பிரேசில் தொடரில் மொத்தம் 736 வீரர்கள் கலந்து கொண்டனர்.

4157...

4157...

ஜெர்மனி அணி இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் மொத்தம் 4157 பாஸ்களை பூர்த்தி செய்துள்ளது. பந்துகளைக் கடத்துவதில் அதாவது பாஸ் செய்வதில் ஜெர்மனி வீரர்கள்தான் சிறந்தவர்கள்.

76,935...

76,935...

இறுதிப் போட்டி நடந்த மரகானா ஸ்டேடியத்தில் 76,935 பேர் அமர்ந்து போட்டியை ரசித்தனர்.

Story first published: Monday, July 14, 2014, 14:35 [IST]
Other articles published on Jul 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+