For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஃபிபா உலகக் கோப்பை எப்படி... அதிர்ச்சிகள் நிறைந்த முதல் சுற்று ஆட்டம்!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. அனைத்து அணிகளும் முதல் ஆட்டத்தை விளையாடியுள்ளன. ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் நிறைந்ததாக முதல் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தங்களுடைய முதல் ஆட்டத்தை முடித்துள்ளன. கடந்த 7 நாட்களில் நடந்துள்ள 16 ஆட்டங்களில் பல எதிர்பாராத அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், திருப்பங்கள் நடந்தேறியுள்ளன.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பையில் 64 ஆட்டங்கள் விளையாடப்பட உள்ளன.

இதில் பங்கேற்கும் 32 அணிகள், தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரிவு சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. போட்டியின் ஏழாவது நாளான நேற்றுடன், ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. பல ஏமாற்றங்கள், அதிர்ச்சிகள், ஆச்சரியங்களால் உலகக் கோப்பை திருவிழாவின் முதல் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

All the teams completed first matches in the fifa world cup

ஏ பிரிவு

இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்திலேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. ரஷ்யா 5-0 என சவுதி அரேபியாவை வென்றது. அதற்கடுத்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் மொகம்மது சாலாஹின் எகிப்தை 1-0 என உருகுவே வென்றது. தற்போதைக்கு ரஷ்யா, உருகுவே தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

பி பிரிவு

இந்தப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஈரான் 1-0 என மொராக்கோவை அசத்தியது. உலகப் புகழ்பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக விளையாடி ஸ்பெயினுக்கு எதிராக 3-3 என போர்ச்சுகலை தோல்வியில் இருந்து மீட்டார். ஈரான் 3 புள்ளிகளுடன் டாப்பில் உள்ளது.

சி பிரிவு

முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது. பெருவை 1-0 என டென்மார்க் வென்றது. பிரான்ஸ் மற்றும் டென்மார்க் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

டி பிரிவு

கடந்த உலகக் கோப்பையில் சிறந்த வீரர் விருதைப் பெற்ற லியோனல் மெஸ்ஸியின் மேஜிக் முதல் ஆட்டத்தில் பலிக்கவில்லை. அவர் கோல் ஏதும் அடிக்கவில்லை. அவருடைய அர்ஜென்டினா அணி 1-1 என ஐஸ்லாந்துடன் டிரா செய்தது. மற்றொரு ஆட்டத்தில் நைஜீரியாவை 2-0 என வென்று குரேஷியா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இ பிரிவு

செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தது. மெஸ்ஸியைத் தொடர்ந்து நெய்மரும் ஏமாற்றினார். அவரும் கோல் ஏதும் அடிக்கவில்லை. அவருடைய பிரேசில் அணி 1-1 என சுவிட்சர்லாந்துடன் டிரா செய்தது. செர்பியா 3 புள்ளிகளுடன் டாப்பில் உள்ளது.

எப் பிரிவு

நடப்பு சாம்பியனான ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மெக்சிகோ அணி 1-0 என ஜெர்மனியை அபாரமாக வென்றது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்வீடன் 1-0 என தென் கொரியாவை வென்றது. ஸ்வீடன், மெக்சிகோ தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

ஜி பிரிவு

பெல்ஜியம் அணி 3-0 என பனாமாவை வென்றது. கடைசி நேர கோலால் 2-1 என துனீஷாவை இங்கிலாந்து வென்றது. பெல்ஜியம், இங்கிலாந்து தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

எச் பிரிவு

இதில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. மற்றொரு ஆட்டத்தில் போலந்தை 2-1 என செனகல் வென்றது. ஜப்பான் மற்றும் செனகல் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

Story first published: Wednesday, June 20, 2018, 9:15 [IST]
Other articles published on Jun 20, 2018
English summary
All the 32 teams completed their first matches in the fifa world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X