Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மரண அடியை கேள்விபட்டிருப்பீங்க… நேரில் பார்த்த புனே சிட்டி

புனே: மரண அடி பற்றி கேள்விபட்டிருப்பீங்க. நேரில் பார்த்தது, அனுபவித்தது உண்டா. ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்சி அணிக்கு எதிராக புனே சிட்டி அணிக்கு இந்த அனுபவம் மீண்டும் கிடைத்தது.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் துவங்கியுள்ளது. 2015ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எப்.சி., அணி உள்பட 10 அணிகள் இந்தாண்டு பங்கேற்கின்றன.

another win for chennaiyin fc

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல்' டோணி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்.சி., அணி, லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இரண்டாவது லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி வென்றது. இதில், ஒரு கோல் எதிரணி போட்டுத் தந்தது.

சென்னையின் வெற்றி பவனி

இந்த நிலையில், புனே சிட்டி அணி்க்கு எதிரான லீக் போட்டி நேற்று நடந்தது. இதுவரை இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. இதில், 4 முறை சென்னையின் எப்சி வென்றது, இரண்டு முறை டிராவானது.

இந்த ஆட்டத்திலாவது வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்று புனே களமிறங்கியது. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் புனே வீிரர் அல்பாரோ கோல் அடித்தார். ஆனஆல் அது ஆப் சைடு என்று அறிவிக்கப்பட்டதால், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சென்னைக்கு கோல்

முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்காததால், இரண்டாவது பாதியில் சென்னையின் எப்சி ஆக்ரோஷமாக விளையாடத் துவங்கியது. ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் சென்னையின் எப்சி கேப்டன் செரீனோ கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள மூன்று ஆட்டங்களில் சென்னையின் எப்சி பெற்றுள்ளது. வரும் 7ம் தேதி கோல்கத்தா அணியை சந்திக்கிறது.

Story first published: Monday, December 4, 2017, 15:32 [IST]
Other articles published on Dec 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+