Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பைக்கு பின் ஓய்வா? மெஸ்ஸி மீதான மரியாதை.. நெகிழ்ச்சியில் ரொனால்டோ அளித்த அந்த பதில்!

தோஹா: கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், நட்சத்திர வீரர் ரொனால்டோ கடந்து வந்த பாதை குறித்து பேசியுள்ளார். அதேபோல் மெஸ்ஸி உடனான நட்பு, ஓய்வு குறித்தும் பேசியுள்ள கருத்துக்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ.. கால்பந்து உலகின் மகத்தான வீரர். குடிசையில் இருந்து கோபுரத்தை பிடித்த பெரும் சாதனையாளர். வாழ்வா, சாவா போட்டிகளில் களத்தில் ரொனால்டோ இருந்தால், எத்தனை மகத்தான வீரர்கள் சுற்றி இருந்தாலும், நிச்சயம் கோல் போஸ்ட்டுக்குள் பந்து சென்றுவிடும்.

கற்பனை செய்ய முடியாத சாதனைகளை கண் இமைக்கும் நொடிகளில் களத்தில் செய்து காட்டும் ரொனால்டோ, உலகக்கோப்பையில் தனது கனவை எட்டிப் பிடிப்பதற்காக 37வது வயதில் களமிறங்கியுள்ளார். கத்தார் மையம் கொண்டுள்ள ரொனால்டோ என்னும் புயல், வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளையும், மெஸ்ஸி உடனான நட்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

போர்ச்சுகல் vs அர்ஜென்டினா

போர்ச்சுகல் vs அர்ஜென்டினா

அப்போது ஃபிபா உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகள் அணி வீழ்த்தினால் உங்களின் உணர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, இந்த கற்பனையே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைவிட வேறு எதையும் நான் கேட்க போவதில்லை. நான் என்று அல்ல, போர்ச்சுகல் அணியின் கோல்கீப்பர் ஒரு கோல் அடித்தால் கூட நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன்.

இதுவே என் ஆசை

இதுவே என் ஆசை

ஏனென்றால் போர்ச்சுகல் அணி உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை. ஒருவேளை அப்படி நடந்தால், உலகக்கோப்பையில் இருந்து ஓய்வுபெற்றுவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மெஸ்ஸி உடனான நட்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரொனால்டோ அளித்த பதில் மெஸ்ஸி ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

16 ஆண்டுகள்

16 ஆண்டுகள்

அதற்கு அவர், மெஸ்ஸி மிகச்சிறந்த கால்பந்து வீரர். தனி மனிதர்களாக இருவரும் கால்பந்து களத்தில் 16 ஆண்டுகள் போட்டியிட்டு வருகிறோம். எனக்கு அவருடன் சிறந்த நட்பு உள்ளது. நான் அவருடைய நண்பர் இல்லை. நண்பர் இல்லையென்றால், ஒவ்வொரு நாளும் நேரம் செலவிடும் வகையிலான நட்பு எங்களுக்குள் இல்லை. அதேபோல் அலைபேசியிலும் அதிகமாக பேசிக் கொள்ள மாட்டோம்.

மெஸ்ஸி பற்றி ரொனால்டோ

மெஸ்ஸி பற்றி ரொனால்டோ

அவர் எனக்கு சக வீரரை போன்றவர். அவருக்கு என் மீது எவ்வளவு மரியாதை இருக்கிறதோ, அதே அளவிற்கு எனக்கு மெஸ்ஸி மீது மரியாதை இருக்கிறது. என் மீதான மரியாதை மெஸ்ஸி ஒவ்வொரு முறை பேசும் போது வெளிப்படுத்துவார். என் காதலியும் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் தான். மெஸ்ஸியை பற்றி இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அர்ப்பணிப்புடன் கால்பந்து விளையாட்டுக்காக பல விஷயங்களை செய்தவர் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஓய்வு குறித்த கேள்விக்கு, நான் இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை விளையாட விரும்புகிறேன். 40 வயதில் எனது கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஏனென்றால் வாழ்க்கையில் நான் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, November 19, 2022, 14:26 [IST]
Other articles published on Nov 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+