Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெஸ்ஸியால் வெற்றிக்கனியைப் பறித்த அர்ஜெண்டினா – 2-1 கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தியது!

பிரேசிலியா: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் போஸ்னியாவுடன் மோதி அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.

உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் களமிறங்கும் அர்ஜெண்டினா இந்த முறை உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் "எப்" பிரிவு ஆட்டத்தில் இன்று போஸ்னியாவுடன் அர்ஜெண்டினா அணி மோதியது. ஆட்டத்தின் மத்தியப் பகுதிவரை அர்ஜெண்டினா ஒரே ஒரு கோலை மட்டுமே அடித்திருந்தது.இந்நிலையில் போஸ்னியா அணியும் தன்னுடைய பதிலடியாக ஒரு கோலை பதிவு செய்து ஆட்டத்தை கடுமையாக்கியது.

Argentina 2-1 Bosnia-Herzegovina: Lionel Messi makes his mark to seal victory

அர்ஜெண்டினாவின் முதல் கோலை போஸ்னியாவின் ஆட்டக்காரர் தவறுதலாக அவராகவே போஸ்னியாவின் கோல் கம்பத்திற்குள் செலுத்தி நிலைமையை அர்ஜெண்டினாவிற்கு சாதகமாக்கினார்.

அதன்பின்னர் சூடுபிடித்த இறுதிக் கட்ட ஆட்டத்தில், மெஸ்ஸி மேலும் ஒரு கோலை அடித்ததால், அர்ஜெண்டினா 2-1 என்ற கணக்கில் போஸ்னியா அணியை வீழ்த்தி வெற்றிக்கனியைப் பறித்தது.

Story first published: Monday, June 16, 2014, 10:09 [IST]
Other articles published on Jun 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+