For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெஸ்ஸி மேஜிக் துவங்குகிறது.... இன்று ஐஸ்லாந்துடன் அர்ஜென்டீனா விளையாடுகிறது!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் டி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் அர்ஜென்டீனா, ஐஸ்லாந்து மோதுகின்றன.

Argentina to face iceland in the fifa world cup

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் டி பிரிவில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் அர்ஜென்டீனா விளையாட உள்ளது. மெஸ்ஸியின் மேஜிக்கை காண்பதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. டி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியுடன் அர்ஜென்டீனா விளையாட உள்ளது.
----
பிரிவு டி
அர்ஜென்டீனா - ஐஸ்லாந்து
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி மாலை 6.30 மணி
----
முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான அர்ஜென்டீனா கடைசியாக பங்கேற்ற 12 உலகக் கோப்பைகளில் 11ல் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2002ல் மட்டுமே பிரிவு சுற்றில் வெளியேறியது. கடைசியாக விளையாடிய 15 பிரிவு சுற்று ஆட்டங்களில் 12ல் வென்றுள்ளது. ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.

கடைசியாக நடந்த மூன்று உலகக் கோப்பைகளிலும் பிரிவுச் சுற்றில் அர்ஜென்டீனா முதலிடத்தில் இருந்தது. கடந்த 6 உலகக் கோப்பைகளில் முதல் ஆட்டத்திலும் வென்றுள்ளது.

ஐஸ்லாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது. 2016ல் யூரோ கால்பந்து போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறி அசத்தியது. இதற்கு முன்பு 2010ல் ஸ்லோவாகியா அணி மட்டுமே அறிமுக உலகக் கோப்பையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
--
முக்கிய வீரர்கள்

அர்ஜென்டீனா - மெஸ்ஸியைத் தவிர மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர் மேக்ஸ்மிலானோ மீசா. முன்கள வீரர் மேனுவேல் லான்சிலி இல்லாததால், மெஸ்ஸியுடன் இணைந்து பந்தைக் கடத்திச் செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் உள்ளார்

ஐஸ்லாந்து - ஜில்பி சிகுர்ட்சன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் 2016 யூரோவில் கலக்கிய ஜோகான் பெர்க் குட்முட்சன் உலகக் கோப்பையிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
---
1978, 1986ல் உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டீனா மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு தற்போது உள்ளதாகக் கருதப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் லியோனல் மெஸ்ஸி. கால்பந்து உலகின் தலைச் சிறந்த வீரராக உள்ள அவர், கடந்த உலகக் கோப்பையில் பைனல் வரை அணியை அழைத்துச் சென்றார். கடந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட அவர், உலகக் கோப்பையை வென்று, தனது திறமையை நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

உலகக் கோப்பையில் முதல் முறையாக நுழைந்துள்ள ஐஸ்லாந்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 2016ல் யூரோ கோப்பை போட்டியில் காலிறுதிக்கு நுழைந்து, உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளது. இந்த அணிக்கு எதிராக மெஸ்ஸியின் மேஜிக்கை பார்க்க கோடிக் கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Story first published: Saturday, June 16, 2018, 1:23 [IST]
Other articles published on Jun 16, 2018
English summary
Argentina to face iceland in the group d match in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+