Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெஸ்ஸி மேஜிக் மாயமானது.... அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் அர்ஜென்டீனா டிரா!

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் டி பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் 1-1 என அர்ஜென்டீனா டிரா செய்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் மேஜிக் இந்த ஆட்டத்தில் மாயமானது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Argentina failed to show its mastery against iceland in the fifa world cup

போட்டி முடிவுகள்

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. டி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியுடன் அர்ஜென்டீனா விளையாடியது. இரு அணிகளும் தலா ஒரு கோலடிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது.

----

பிரிவு டி

அர்ஜென்டீனா - ஐஸ்லாந்து

1-1

----

முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான அர்ஜென்டீனா கடைசியாக பங்கேற்ற 12 உலகக் கோப்பைகளில் 11ல் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2002ல் மட்டுமே பிரிவு சுற்றில் வெளியேறியது. கடைசியாக விளையாடிய 15 பிரிவு சுற்று ஆட்டங்களில் 12ல் வென்றுள்ளது. ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.

கடைசியாக நடந்த மூன்று உலகக் கோப்பைகளிலும் பிரிவுச் சுற்றில் அர்ஜென்டீனா முதலிடத்தில் இருந்தது. கடந்த 6 உலகக் கோப்பைகளில் முதல் ஆட்டத்திலும் வென்றுள்ளது.

ஐஸ்லாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது. 2016ல் யூரோ கால்பந்து போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறி அசத்தியது. இதற்கு முன்பு 2010ல் ஸ்லோவாகியா அணி மட்டுமே அறிமுக உலகக் கோப்பையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இன்று நடந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே பந்து கிட்டத்தட்ட அர்ஜென்டீனாவிடமே இருந்தது. 78 சதவீத நேரம் பந்து அந்த அணியிடம் இருந்தது. அந்த அணிக்கு 27 முறை கோலடிக்கும் முயற்சி கிடைத்தது. அதில் 7 முறை கோல் பகுதியை நோக்கி பந்தை செலுத்தியது. அதில் ஒன்று மட்டுமே கோலானது.

பந்து தங்களிடம் அதிக நேரம் இல்லாதபோதும் ஐஸ்லாந்து வீரர்கள் அசத்தலாக விளையாடினர். ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் அர்ஜென்டீனாவின் ஆகுரோ கோலடித்தார். 23வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் பின்போகசான் கோலடித்து அதை சமன் செய்தார்.

அதன்பிறகு இரு அணிகளும் கோலடிக்கவில்லை. ஆனால், அர்ஜென்டீனாவுக்கு 10 பெனால்டி கார்னர்கள் கிடைத்தும், அதை கோலாக்கத் தவறியது.

கடந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த வீரர் என்ற விருதைப் பெற்ற அர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸின் ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பல கோல் வாய்ப்புகளை அவர தவறவிட்டார். கடைசியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்துள்ளது.

Story first published: Saturday, June 16, 2018, 22:40 [IST]
Other articles published on Jun 16, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+