Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜென்டினா வெற்றி.. மைதானத்திலேயே மேலாடையை கழற்றிய ரசிகை.. கத்தார் அரசால் கைது செய்யப்படுவாரா?

தோஹா: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் வெற்றியை, அந்நாட்டு ரசிகை ஒருவர் மேலாடையை கழற்றி மைதானத்திலேயே கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வீழ்த்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.

உலகக்கோப்பையை அர்ஜென்டினாவுக்கு எடுத்து சென்றுள்ள அந்நாட்டு வீரர்கள் மக்களுக்கு நடுவே உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உலகக்கோப்பை வெற்றியால், அர்ஜென்டினாவே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலாடையை கழற்றி கொண்டாட்டம்

மேலாடையை கழற்றி கொண்டாட்டம்

இதனிடையே கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்ற போது, அந்நாட்டு ரசிகை ஒருவர் தனது மேலாடையை கழற்றி சுழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கால்பந்து போட்டிகளின் போது ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள ரசிகைகளின் இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சாதாரண விஷயம் தான்.

கத்தார் அரசு அறிவுறுத்தல்

கத்தார் அரசு அறிவுறுத்தல்

ஆனால் கத்தார் நாட்டின் சட்டங்களின் படி, பொதுவெளியில் மக்கள் யாரும் தங்களது உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, கால்பந்து ரசிகர்களுக்கு கத்தார் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தங்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு அறிவுறுத்தி இருந்தது.

பெண்களுக்கு கட்டுப்பாடு

பெண்களுக்கு கட்டுப்பாடு

குறிப்பாக பெண் ரசிகைகள் தோளில் இருந்து முழங்கால் வரையில் மறைக்கும் ஆடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டனர். இருப்பினும் கால்பந்து ரசிகர்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படவில்லை. குறிப்பாக குரோஷியா ரசிகையான இவானா நோல், குறைந்த ஆடைகளை அணிந்து மைதானங்களில் வலம் வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த நிலையில் அர்ஜென்டினா ரசிகை மேலாடையை கழற்றி கொண்டாடிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.

ரசிகைக்கு சிறை?

ரசிகைக்கு சிறை?

இதனால் கத்தார் நாட்டின் சட்டப்படி, அந்த ரசிகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இதனிடையே அர்ஜென்டினா ரசிகை விரைந்து கத்தார் நாட்டில் இருந்து வெளியேறுவது நல்லது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

Story first published: Wednesday, December 21, 2022, 10:06 [IST]
Other articles published on Dec 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+